ஆமை புகுந்த வீடும், ஆர்எஸ்எஸ் காரன் புகுந்த ஊரும் உருப்படாது.. கிழித்தெடுத்த திருமாவளவன்

சென்னை:
ஆமை புகுந்த வீடும், ஆர்எஸ்எஸ் காரன் புகுந்த ஊரும் உருப்படாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்

கூறினார்.

பாஜக ஆளும் மணிப்பூரில் குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அவர்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்து வரப்பட் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து விசிக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:

ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள். அதேபோல, ஆர்எஸ்எஸ் காரன் நுழைந்த ஊரும், பாஜக காரன் நுழைந்த ஊரும் உருப்படவே உருப்படாது. ஊரையே ரெண்டாக்கி விடுவார்கள். சாதி வெறியை தூண்டுவார்கள். மத வெறியை தூண்டுவார்கள். எதை தூண்டினால் அவர்களுக்கு லாபம் எனத் தோன்றுகிறதோ அதன் அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்துவார்கள்.

தமிழ்நாட்டிலே 10 – 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரே மேடையிலே ஆதி திராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் ஆகிய சமூகங்களின் தலைவர்கள் ஒன்றாக கலந்துகொள்ளக் கூடிய சூழ்நிலை இருந்தது. இன்றைக்கு அது அரிதாகிவிட்டது. இதை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியது ஆர்எஸ்எஸ் கும்பல்தான். இந்த ஒற்றுமையை சிதைத்தது ஆர்எஸ்எஸ் கும்பல்தான். பிழைப்புவாதிகளுக்கு பதவியை கொடுத்து அவர்கள் மூலமாக சமூகத்தை பிரிப்பது பாஜகவின் தந்திரம். ஒவ்வொரு சாதியிலும் ஒருவரை பிடிப்பார்கள். அவர்களுக்கு பதவியை கொடுத்து அந்த சமூகத்தையே தங்கள் பக்கம் இழுப்பார்கள். இது பாஜகவின் உத்தி.

எல்லா சாதிகளையும் ஆண்ட சாதி என ஊக்குவிப்பார்கள். சாதி வெறி இல்லாதவர்களுக்கும் சாதி வெறியை ஊட்டுவார்கள். ஒரு 50 பேர் மட்டுமே இருக்கிற சாதி சங்கத்தின் தலைவர் அழைத்தால் கூட உள்துறை அமைச்சர் அமித் ஷா ஓடோடி வந்துவிடுவார். அந்த சாதி சங்கத் தலைவருக்கு பொன்னாடை போர்த்துவார். காரணம், அந்த சாதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான். இதுவும் அவர்களின் தந்திரங்களிலே ஒன்று.

அப்படித்தான் மணிப்பூரிலும் வெறுப்பு அரசியலை தூண்டிவிட்டு பாஜக காலடி எடுத்து வைத்தது. குக்கி இனத்தவரையும், மைத்தேயி இனத்தவரையும் மத ரீதியாக பிளவுப்படுத்தியது. இந்துக்களான மைத்தேயி இன மக்களை மட்டும் அணி திரட்டினால் போதும் என்ற எண்ணத்தில் அவர்களை தன்வசப்படுத்தி, குக்கி இன மக்களுக்கு எதிராக அவர்களை தூண்டிவிட்டார்கள். இதுவே மணிப்பூரில் இன்றைக்கு பயங்கர கலவரம் வெடிக்க காரணம். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.