சவுதி அரேபியாவில் ஆசிரியராக சூப்பர் சான்ஸ்… இன்னும் 6 நாட்கள் தான் டைம்!

சவுதி அரேபியாவில் 2023-24ஆம் கல்வியாண்டு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தை போலவே பள்ளிகளில் மூன்று செமஸ்டர்கள் எழுதும் முறையை பயன்பாட்டில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு செமஸ்டருக்கும் வெவ்வேறு புத்தகங்கள். அதன்படி, இரண்டாவது செமஸ்டர் நவம்பர் 26, மூன்றாவது செமஸ்டர் மார்ச் 3, 2024 ஆகிய தேதிகளில் தொடங்குகின்றன.

ஒரே நாளில் 2 வயது குறைப்பு ..தென் கொரியா அரசு அறிவிப்பு

சவுதி அரேபிய கல்வித்துறை அறிவிப்பு

புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குள் புதிதாக ஆசிரியர்களை நியமிக்க அந்நாட்டு கல்வித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 11 ஆயிரத்து 551 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இவை கற்பித்தல் மற்றும் நிர்வாக ரீதியிலான இடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உங்ககிட்ட? அப்ப நீங்க தான் ராஜா… விசா தேவையே இல்லயாம்!

ஆசிரியர் காலிப் பணியிடங்கள்

ஆசிரியர் பணியிடங்களை பொறுத்தவரை கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களை கற்பிக்க ஆட்கள் தேவை. இதற்காக ஆண்கள், பெண்கள் என இருசாராரும் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள நபர்கள் ஒருங்கிணைந்த தேசிய வேலைவாய்ப்பு இணையதளமாக ’Jadara’ல் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கால அவகாசம்

வரும் ஜூலை 25ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி ஜூலை 30ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம், பல்கலைக்கழக பட்டம், வெளிநாட்டில் படித்திருந்தால் உள்நாட்டில் உரிய பட்டப்படிப்பிற்கு இணையான தகுதி உள்ளிட்டவற்றை பெற்றிருக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த நபர்கள்

சவுதி அரேபியாவில் தரமான கல்வியை அளிப்பதன் மூலம் தேசிய அளவிலான இலக்கை அடைவதற்கு தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தேவைப்படுவதாக அந்நாட்டு கல்வித்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் தாங்க முடியாத வெப்பம்… தலைகீழாக மாறிய வானிலை… படாத பாடு படும் பொதுமக்கள்!

புதிதாக இரண்டு பாடங்கள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து புவி அறிவியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய இரண்டு பாடங்கள் நடுநிலைப் பள்ளி அளவில் சேர்க்க சவுதி அரேபிய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுமுறை நாட்கள்

வரும் கல்வியாண்டில் 10 வெவ்வேறு விதமான விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. முதல், இரண்டாவது செமஸ்டர் இறுதியில், மிட் செமஸ்டரின் போது, தேசிய தினம், நிறுவன நாள், ரம்ஜான் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.