
‛ஜெயிலர்' படத்தின் ‛ரன்னிங் டைம்'
டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், சுனில், தமன்னா, மிர்ணா என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே ஒன்றினைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூலை 28ம் தேதி அன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிடங்கள், இரண்டாம் பாதி 1மணி நேரம் 30 நிமிடங்கள் மொத்தமாக 2 மணி நேர 49 நிமிடங்கள் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகிறது.