தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஓஎம்ஆர்-க்கு இன்னைக்கு நைட்டு போறீங்களா.. வெதர்மேன் பரபர "வார்னிங்"

சென்னை:
தாம்பரம், கூடுவாஞ்சரி, ஈசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு மழை தரமான சம்பவம் செய்யப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதன் தாக்கத்தை காண முடிகிறது. தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோயில், கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, வட தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கடல் காற்று ஆகியவற்றால் மழை பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை நேற்று முதல் பரவலாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று மாலையும் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நேற்று முதல் பலமாகவும், மிதமாகவும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று இரவு சென்னையில் எங்கெல்லாம் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதன்படி தென்சென்னை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், சிறுசேரி, ஓஎம்ஆர், ஈசிஆர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இன்று இரவு பலத்த மழை பெய்யும் என அவர் கூறியுள்ளார். பருவக்காலத்தில் பெய்வதை போல இந்த மழை தீவிரமாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் சற்று முன்கூட்டியே புறப்பட்டுவிடுவது நலம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.