இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அப்போட்டியின் நான்காவது நாளான நேற்று 34 பந்துகளில் 52 ரன்களை அடித்திருந்தார் இஷன் கிஷன். ‘இந்த வெற்றிக்கு காரணம் ரிஷப் பண்ட் கொடுத்த அறிவுரைதான்’ என்று கூறி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார் இஷன்.

கார் விபத்தினால் ஏற்பட்ட காயங்களால் சென்ற மாதம் நடந்த WTC பைனல்ஸ் மற்றும் பார்டர்-கவாஸ்கர் போட்டி மட்டுமல்லாமல் தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த டெஸ்ட் தொடரிலும் விளையாடும் வாய்ப்பை ரிஷப் பண்ட் இழந்துவிட்டார்.”நான் NCA-வில் பயிற்சி செய்து கொண்டிருக்கும் சமயத்தில் ரிஷப் பண்ட் அங்கிருந்தார். நாங்கள் இருவரும் U19 காலத்திலிருந்தே பல போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளோம்.

அதனால் நான் எப்படி விளையாடுவேன் என்று நன்கு அறிந்த அவர் நல்ல அறிவுரைகளை கொடுத்து உதவி செய்தார். அவருடன் உரையாடியதில் பெரு மகிழ்ச்சியுடன் நன்றி உணர்வும் கொண்டுள்ளேன்” இவ்வாறு இஷன் கிஷன் கூறியிருந்தார். மேலும், இந்தப் போட்டியில் ‘RP 17’ என எழுதப்பட்டிருந்த ரிஷப் பண்டினுடைய பேட்டைதான் இஷன் கிஷன் பயன்படுத்தியிருந்தார்.