வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது ஆட்சியின் போது அதிகம் சொத்து சேர்த்தது, மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் சில வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக லாகூரில் இருந்து வந்தார்.
![]() |
அப்போது கோர்ட் வெளியே பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர், இம்ரான் கானை கைது செய்தனர். பின் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தேர்தல் ஊழல் தொடர்பாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் இம்ரான்கானுக்கு எதிராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement