பெஷாவர் : உத்தரபிரதேச மாநிலம், ஜலாவுன் மாவட்டம், கைலோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அஞ்சு, 34.
திருமணமான இவர், கணவர் மற்றும் தனது, 15 வயது மகள், ஆறு வயது மகனுடன், ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில், வசித்து வந்தார்.
2019ம் ஆண்டு, ‘பேஸ்புக்’ வாயிலாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானின், கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல்திர் மாவட்டத்தின், குல்ேஷா கிராமத்தைச் சேர்ந்த, நஸ்ருல்லா, 29 என்பவர், அஞ்சுவுக்கு அறிமுகமாகி உள்ளார்.
அவருடன், ஏற்பட்ட நட்பால், நஸ்ருல்லாவை பார்க்க, 30 நாட்கள் விசா பெற்று, பாகிஸ்தானுக்கு அஞ்சு சென்றுள்ளார்.
இந்திய பெண், பாக்,, வந்துள்ளதை அறிந்த, அந்நாட்டு ஊடகங்கள், இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியிட்டன.
எனினும், அதை மறுத்துள்ள நஸ்ருல்லா, அஞ்சுவை திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை எனவும், வரும் ஆக.,20ம் தேதி விசா காலம் முடிந்ததும், அவர் இந்தியா திரும்புவார் எனக்கூறியுள்ளார்.
தற்போது, நஸ்ருல்லா வீட்டில் உள்ள தனி அறையில், அவரது, வீட்டு பெண்களுடன் அஞ்சு பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மேல்திர் மாவட்ட காவல் அதிகாரி, முஸ்டாக், அஞ்சுவிடம் விசாரணை நடத்தி உள்ளார்.
அஞ்சுவின் கணவர் அரவிந்த் கூறுகையில்,’ஜெய்ப்பூர் செல்வதாக கூறி, கடந்த, 20ம் தேதி அவர், வீட்டிலிருந்து புறப்பட்டார். பின்னர் தான், பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்தது. அஞ்சு, நிச்சயம் வீடு திரும்புவார்,’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்