டொரன்டோ: கனடாவில், பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே படித்து வந்த இந்திய இளைஞரின் காரை திருடிய கும்பல், அவரை கடுமையாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தியாவை சேர்ந்தவர் குர்விந்தர் நாத், 24. கடந்த 2021ல், வட அமெரிக்க நாடான கனடாவில், எம்.பி.ஏ., படிப்பதற்காக சென்றார். அங்குள்ள பீட்சா கடையில், ‘டெலிவரி பாய்’ பணியில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 9ம் தேதி, மிஸ்ஸிசாகா என்ற இடத்தில் பீட்சா டெலிவரி செய்ய, அதிகாலை 2:10 மணியளவில் தன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பிரிட்டானியா அண்ட் கிரெடிட்வியூ சாலை என்ற இடத்திற்கு அருகே அவரது காரை வழிமறித்த அடையாளம் தெரியாத சிலர், குர்விந்தர் நாத்தின் தலைமையில் கடுமையாக தாக்கிவிட்டு காரை எடுத்து தப்பி சென்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குர்விந்தர் நாத், கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். திருடப்பட்ட கார், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி, தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
உயிரிழந்த இளைஞரின் உடல் வரும் 27ம் தேதி இந்தியா வந்தடைய உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement