சென்னை: நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க உருவாகி வருகிறது கல்கி 2898 AD படம்.
ப்ராஜெக்ட் கே என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் டைட்டில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த டைட்டில் அறிவிக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அமிதாப் பச்சனும் வீடியோ கால் மூலம் பேசினார்.
தள்ளிப்போகும் கல்கி 2898 AD படத்தின் ரிலீஸ்: பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், பசுபதி, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 AD. முன்னதாக ப்ராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட விழாவில் புதிய டைட்டில் வைக்கப்பட்டது. அப்போது வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சர்வதேச அளவில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.
பிரபல இயக்குநர் ராஜமௌலியும் படக்குழுவினருக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். பிரபாசின் நடிப்பு உள்ளிட்டவற்றிற்கு பாராட்டு தெரிவித்திருந்த அவர், படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த வகையில் தற்போது ஜனவரியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிப்போகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே மாதத்தில் கோடைக் கொண்டாட்டமாக இந்தப் படம் வெளியாகவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தில் வில்லனாக இணைந்துள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு 150 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சில தினங்கள் மட்டுமே அவர் படத்திற்காக கால்ஷீட் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் நடிப்பில் தற்போது இந்தியன் 2 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்தப் படமும் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்தப் படமும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஒரே ரேத்தில் கமலின் இரு படங்கள் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரிலீசாகவுள்ளன. இந்தத் தகவல் கமல் ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை கொடுத்தாலும், அடுத்தடுத்த மாதங்களில் அவரது படங்கள் ரிலீசாவது அவர்களுக்கு இனிப்பான செய்திதான்.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் கல்கி 2898 AD படம் முன்னதாகவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அதிகமான லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் பல்வேறு அம்சங்களை பயன்படுத்த உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுவும் படத்தன் ரிலீஸ் தள்ளிப் போக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.