Kanguva: கங்குவா படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம் இவ்வளவா ? அடேங்கப்பா..!

தமிழ் சினிமாவில் தற்போது தரமான கம்பாக் கொடுத்து மீண்டும் வெற்றிப்பாதையில் பயணித்து வருகின்றார் சூர்யா. இடையில் சில ஆண்டுகள் தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்த சூர்யா சூரரைப்போற்று படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினார். என்னதான் அப்படம் OTT யில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் சூர்யாவிற்கு சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து ஜெய் பீம் என்ற திரைப்படத்தை நடித்து தயாரித்து பரபரப்பை ஏற்படுத்தினார் சூர்யா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சில சர்ச்சைகளில் சிக்கியது.

கங்குவா திரைப்படம்

இதையெல்லாம் தாண்டி கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் சூர்யா. ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் ஐந்தே நிமிடங்கள் தான் சூர்யா நடித்தார் என்றாலும் இன்றளவும் ரசிகர்கள் ரோலக்ஸ் ரோலையும், சூர்யாவையும் கொண்டாடி வருகின்றனர்.

Rajini: நான் சூப்பர்ஸ்டாராக இருப்பதற்கு முக்கிய காரணம் இதுதான்..ரகசியத்தை சொன்ன ரஜினி..!

இதையடுத்து சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்த்து இருந்து வருகின்றது. அந்த வகையில் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகின்றார். சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் உருவாகும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகின்றார்.

மேலும் பாலிவுட் திரையுலகில் பிரபலமான நாயகியாக வலம் வரும் திஷா பதானி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் இரண்டு பாகங்களாக மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாக இருக்கின்றது. இதையடுத்து நேற்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

சூர்யாவின் சம்பளம்

யூடூப்பிலும் பல சாதனைகளை கங்குவா வீடியோ செய்து வருகின்றது. இந்நிலையில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கங்குவா படத்தில் நடிப்பதற்காக சூர்யாவிற்கு கிட்டத்தட்ட 45 கோடிவரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

சூர்யாவிற்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதாலும், மேலும் கங்குவா திரைப்படம் ஒரு பான் இந்திய படம் என்பதாலும் அவருக்கு அதிகளவில் சம்பளம் பேசப்பட்டு இருக்கின்றதாம். மேலும் இப்படத்திற்கு பிறகு சூர்யாவின் சம்பளம் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.