Kanguva: கங்குவா போஸ்டரில் இதை கவனித்தீர்களா ? இது என்ன புதுசா இருக்கு..!

சூர்யா தற்போது கங்குவா என்ற பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகின்றார். சமீபகாலமாக சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றன. மேலும் சூரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார் சூர்யா.

இதையடுத்து விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார். நெகடிவ் ரோலில் நடித்து அசத்திய சூர்யா தற்போது கங்குவா என்ற படத்தில் நடித்து வருகின்றார். சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க திஷா பதானி நாயகியாக நடித்து வருகின்றார்.

கங்குவா போஸ்டர்

இந்நிலையில் கங்குவா திரைப்படம் நிகழ்காலத்தில் நடப்பது போலவும், 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெறுவது போலவும் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகின்றது. மேலும் கங்குவா திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்திலே அதிக பொருட்ச்செலவில் உருவாகும் படமாகும். இதையடுத்து இரண்டு பாகங்களாக உருவாகும் கங்குவா படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Kanguva: கங்குவா படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம் இவ்வளவா ? அடேங்கப்பா..!

இந்நிலையில் நேற்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிலிம்ஸ் வீடியோ மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது. கிலிம்ஸ் வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே அதிக மில்லியன் பார்வையாளர்களை பெற்ற வீடியோவாக கங்குவா உருவெடுத்தது. இதையடுத்து மாலை கங்குவா படத்தின் மாஸான போஸ்டர் ஒன்று படக்குழுவால் வெளியிடப்பட்டது.

டீகோட் செய்யும் ரசிகர்கள்

தற்போது இந்த போஸ்ட்டரை ரசிகர்கள் டீகோட் செய்து ஒரு விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். அதாவது கங்குவா போஸ்டரில் சூர்யா சார் என படக்குழு குறிப்பிட்டுள்ளது. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் சார் என அழைக்கப்பட்ட சூர்யா தற்போது கங்குவா படத்தில் சூர்யா சார் என குறிப்பிடப்பட்டுள்ளார். எனவே கங்குவா படத்தின் டைட்டில் கார்டில் சூர்யா சார் என குறிப்பிடப்படுமா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

மேலும் சிலரோ, சார் எல்லாம் குறிப்பிடமாட்டார்கள், நேற்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் படக்குழு மரியாதை நிமித்தமாக குறிப்பிட்டுள்ளனர் என பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்த போஸ்டர் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.