Leo: வாரிசை அடுத்து லியோ விஜய்யுடன் மீண்டும் மோதும் 'தலைவர்'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், அனுராக் கஷ்யப், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருக்கும் லியோ படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.

“கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview !
லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் என்ன வித்தியாசமாக காட்டியிருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். மேலும் லியோவில் ஒரு ஊரையே நடிக்க வைத்திருக்கிறார். அப்படி என்ன கதை என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி லியோ படம் தனியாக வரவில்லை. பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படமும் அதே அக்டோபர் 19ம் தேதி தான் ரிலீஸாகவிருக்கிறது. அனில் ரவிபுடி இயக்கியிருக்கும் பகவந்த் கேசரியில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல், சரத்குமார் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். அக்கட தேசத்தில் லியோவுக்கு பகவந்த் கேசரி கண்டிப்பாக டஃப் கொடுப்பார். மேலும் ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் படம் அக்டோபர் 20ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

விஜய் படத்துடன் பாலகிருஷ்ணாவின் படம் ரிலீஸாவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த வாரிசு படம் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ரிலீஸானது.

அந்த படம் தெலுங்கில் வாரசுடு என்கிற பெயரில் ரிலீஸானது. பொங்கல் பண்டிகையாக வாரிசு படம் ரிலீஸான அதே நாளில் தான் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படமும் வெளியானது. கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் கெத்து காட்டியிருந்தார் பாலகிருஷ்ணா.

ஹனி ரோஸ், ஸ்ருதி ஹாசன் என இரண்டு ஹீரோயின்கள். பொங்கல் வின்னர் வாரிசு தான் என விஜய் ரசிகர்கள் கூற, எங்கள் தலைவரின் வீரசிம்மா ரெட்டி தான் உண்மையான வின்னர் என்றார்கள் அக்கட தேசத்து ரசிகர்கள்.

வீரசிம்மா ரெட்டி படம் ரிலீஸான அன்று விஜய் ரசிகர்கள் சிலரே முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தியேட்டர்களுக்கு சென்றார்கள். பாலகிருஷ்ணாவை தலைவர் என்று கொண்டாடும் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Jailer: என்னாது, ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு வர முடியாதுனு சொன்னாரா விஜய்?

இந்த ஆண்டே இரண்டாவது முறையாக விஜய் படத்துடன் பாலகிருஷ்ணாவின் படம் ரிலீஸாகவிருக்கிறது. அக்டோபர் மாத வின்னரும் எங்கள் தலைவர் தான் என பாலகிருஷ்ணா ரசிகர்கள் ஏற்கனவே பேசத் துவங்கிவிட்டார்கள்.

லியோ பட வேலையை முடித்துவிட்ட விஜய், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார். அந்த படத்துடன் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துவிட்டு அரசியல் வேலை பார்க்கப் போகிறார் என்று தொடர்ந்து பேசப்படுகிறது.

இதற்கிடையே செப்டம்பர் மாதம் புதுக் கட்சியை துவங்குகிறார் விஜய் என தகவல் வெளியாகியிருக்கிறது. 2026ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலை குறி வைத்து செயல்பட்டு வருகிறாராம் விஜய்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.