சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கிய லியோ படத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக விஜய் நடிக்கவுள்ள தளபதி 70 படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தப் படத்திற்காக ஷங்கர் சொன்ன மூன்று கதைகளுக்கும் நோ சொல்லிவிட்டாராம் விஜய்.
ஷங்கரின் கதைகளுக்கு நோ சொன்ன விஜய்: பீஸ்ட், வாரிசு, லியோ அடுத்தடுத்து மூன்று படங்களை வேகமாக முடித்துவிட்டார் விஜய். கடைசியாக விஜய் நடித்த லியோ படத்தை 125 நாட்களில் முடித்துள்ளார் லோகேஷ். தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கும் லியோ, அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது. லியோ டப்பிங் பணிகளை முடித்துவிட்டு தளபதி 68ல் நடிக்கவுள்ளாராம் விஜய்.
விஜய்யின் 68வது படமாக உருவாகும் இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக தளபதி 69, தளபதி 70 படங்களின் இயக்குநர்களையும் விஜய் தேர்வு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி, விஜய்யின் 69வது படத்தை அட்லீயும், 70வது படத்தை ஷங்கரும் இயக்கவுள்ளனர். விஜய்யின் நண்பன் படத்தை இயக்கிய ஷங்கர், தற்போது மீண்டும் அவருடன் இணையவுள்ளார்.
‘நண்பன்’ இந்தியில் ஹிட் அடித்த ‘3 இடியட்ஸ்’ ரீமேக்காக தமிழில் உருவாகியிருந்தது. இதனால், இந்தமுறை விஜய்க்காக ஒரிஜினல் ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து வருகிறாராம் ஷங்கர். முதலில் விஜய் ஹீரோவாகவும் விக்ரம் அவருக்கு வில்லனாகவும் நடிக்கும் வகையில் ஒரு கதையை கூறியுள்ளார். ஆனால், இந்த கதையை விஜய் ரிஜக்ட் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
அதன்பின்னர், ‘முதல்வன் 2’ பட கதையை விஜய்யிடம் கூறியுள்ளார் ஷங்கர். இந்த கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும் இறுதியாக இதற்கும் நோ சொல்லிவிட்டாராம். இதனால் அடுத்து சயின்ஸ் ஃபிக்சன் ஜானரில் கதை ஒன்றை கூறியுள்ளார் ஷங்கர். இந்த கதையை ஹாலிவுட் படம் போல பிரம்மாண்டமாக எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆனால், விஜய் தரப்பில் இதற்கும் ரெட் சிக்னல் தான் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இன்னொரு கதையை விஜய்க்காக எழுதி வருகிறாராம் ஷங்கர். இது பொலிட்டிக்கல் த்ரில்லர் ஜானரில் செம்ம வெயிட்டான ஸ்க்ரிப்ட் என சொல்லப்படுகிறது. விஜய் விரைவில் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதால், இந்த கதை அதற்கு இன்னும் சப்போர்ட்டாக இருக்கும் என ஷங்கர் அவரது ஐடியாவை கூறியுள்ளார். இதற்கு விஜய்யும் ஓக்கே எனக் கூறிவிட்டதாக தெரிகிறது. அதனால் விரைவில் விஜய் – ஷங்கர் கூட்டணி அபிஸியலாக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.