வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நொய்டா: உ.பி.யில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான கார்கள் மூழ்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உபி.யில் நொய்டாவில் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஹிண்டன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஒடியது.
இந்நிலையில் நொய்டா எக்கோடெக் என்ற புறநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள கார் ஷோரூம் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புத்தம் புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் வீடியோ புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கார்கள் வெள்ளத்தில் மூழ்கியால் கார் ஷோரூம் நிறுவனத்திற்கு ரூ. பல கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement