வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீன வெளியுறவுத்துறை பதவியில் இருந்து கின் காங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில், வாங் யீ நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஏற்கனவே 2013 முதல் 2022 வரை சீன வெளியுறவு அமைச்சராக பணியாற்றி உள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சராக இருந்த கின் காங், ரஷ்யா, வியட்நாம், இலங்கை பயணத்திற்கு பிறகு ஜூன் 25ல் பீஜிங் வந்தார். அதற்கு பிறகு, அவர் வெளியிடத்தில் காணப்படவில்லை. அதிபர் ஜின்பிங்கிற்கு மிகவும் நெருங்கியவரான கின் காங், பொது வெளியில் தோன்றாதது பல சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து, சீன அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில் கின் காங், வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதில் வாங் யீ, புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ள வாங் யீ, ஏற்கனவே 2013 முதல் 2022 வரை வெளியுறவு அமைச்சராக இருந்தவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement