சென்னை: Honey Rose (ஹனிரோஸ்) தனது அழகுக்கு என்ன காரணம் என்பது குறித்து நடிகை ஹனிரோஸ் விளக்கமளித்திருக்கிறார்.
மலையாளத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான பாய் ஃப்ரெண்ட் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹனிரோஸ். அதனைத் தொடர்ந்து மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். இருந்தாலும் அவர் எதிர்பார்த்தபடி பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அமையாமல் அவ்வப்போது மட்டுமே வாய்ப்புகள் கிடைத்தன.
தமிழில் அறிமுகமான ஹனி: பாலமுருகன் இயக்கிய முதல்கனவே என்ற படத்தின் மூலம் 2007ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானார். அதனையடுத்து ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த சிங்கம்புலி படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்தன. அதனையடுத்து மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி ஆகிய படங்களில் நடித்தாலும் அவருக்கு பெயர் எதுவும் பெற்றுத் தரவில்லை.
என்னது அம்மாவா?: ஹனிரோஸ் கடைசியாக வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். பாலகிருஷ்ணாவுக்கு மகள் வயதிருக்கும் ஹனிரோல் பாலய்யாவுக்கு தாயாக நடித்தார். இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் எந்த ஊரு நியாயம் என கூறி கடுமையாக ட்ரோல் செய்தனர். மேலும் மீம் மெட்டீரியலாகவும் மாறினார். இதற்கிடையே ஹனிரோஸ் உருவ கேலியையும் சமீபகாலமாக சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது: சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஹனிரோஸ் தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவது வழக்கம். அதனைப் பார்த்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் இடுப்பு பகுதியை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என கூற ஆரம்பித்தனர். ஆனால் அதனை ஹனிரோஸ் திட்டவட்டமாக மறுத்து பேட்டியும் கொடுத்தார்.

அறுவை சிகிச்சை எல்லாம் இல்லை: இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி கொடுத்த ஹனிரோஸ், “நடிகைகள் உடல் கொஞ்சம் குண்டாகிவிட்டாலே உருவ கேலி செய்கிறார்கள். எந்த ஆடையணிந்து எப்படி தங்களை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்பது நடிகர்களின் விருப்பம்” என விளக்கமளித்திருந்தார். இதனையடுத்து ஹனி ரோஸை உருவ கேலி செய்யும் போக்கு கொஞ்சம் குறைந்திருக்கிறது.
அழகுக்கு இதுதான் காரணம்: இந்நிலையில் தன்னுடைய அழகுக்கு என்ன காரணம் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “நான் சில பவுடர்களை பயன்படுத்திதான் எனது அழகை மெருகூட்டுவேன். எனது அழகை அதிகப்படுத்துவதற்காக நான் எந்த அறுவை சிகிச்சையும் செய்துகொள்ளவில்லை” என்றார்.