Kangana Ranaut – ஹீரோவின் உதட்டை கடித்தாரா கங்கனா ரணாவத்?.. அவரே கொடுத்த விளக்கம் இதோ

மும்பை: Kangana Ranaut (கங்கனா ரணாவத்) ஹீரோ வீர்தாஸின் உதட்டை கங்கனா ரணாவத் கடித்துவிட்டார் என தகவல் வெளியான சூழலில் அதுகுறித்து அவரே விளக்கம் அளித்திருக்கிறார்.

பாலிவுட் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசுவது அவரது இயல்பு. இதனால் அவர் ஆதரவையும், எதிர்ப்பையும் சமமாகவே சம்பாதித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு திரையுலகில் கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

குயின் கங்கனா: கங்கனா ரணாவத் நடித்த குயின் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இவர் தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். பாஜகவின் ஆதரவாளராக அறியப்படும் இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் கொடுத்துள்ளது. கங்கனா ரணாவத் பாஜக ஆதரவாளர் அதனால்தான் அவருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டதாக விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கங்கனா: தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் பக்கம் வராத அவர் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார். இப்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்திருக்கிறது. படமானது செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருர்க்கிறது. மேலும் ஹிந்தியில் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எமர்ஜென்ஸி படத்திலும் நடிக்கிறார் கங்கனா.

அதிரடி கருத்து: தனது மனதில் பட்டதை பேசும் கங்கனா சமீபத்தில்கூட, ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் ஊரை கூட்டி பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அவர்களது வீட்டுக்குள் வெவ்வேறு மாடியில்தான் வாழ்கிறார்கள். சேர்ந்து வாழ்வது போல் வெளியுலகுக்கு மட்டும் காண்பித்துக்கொள்கிறார்கள். அண்மையில் லண்டன் சென்ற ஆலியா பட் தனது மகளை தனியாக விட்டுவிட்டு சென்றார். பணத்திற்காக திருமணம் செய்தால் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என கூறியிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உதட்டை கடித்த கங்கனா?: இதற்கிடையே கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ரிவால்வர் ராணி என்ற படத்தில் நடித்திருந்தார் கங்கனா. அப்போது படத்தின் ஹீரோ வீர்தாஸுடன் முத்தக் காட்சியில் நடித்தபோது கங்கனா வீர் தாஸின் உதட்டை கடித்துவிட்டார் என்றும்; அதனால் ஹீரோவின் உதட்டில் ரத்தம் வந்ததாகவும் பல வருடங்களாகவே ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கங்கனா ரணாவத் விளக்கம்: இந்நிலையில் அந்தத் தகவல் குறித்து சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கங்கனாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “என்னது கிருத்திக் ரோஷனுக்கு பிறகு பாவப்பட்ட வீர்தாஸை நான் தாக்கினேனா?. இது எப்போது நடந்தது” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கிருத்திக்குடன் டேட்டிங் செல்வதாக சில வருடங்களுக்கு முன்னர் கங்கனா சொன்னதும் அதை கிருத்திக் மறுத்ததும்; அந்த விவகாரம் நீதிமன்றம்வரை சென்றதும் நினைவுகூரத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.