புதுடில்லி: கடந்த 2022-23ம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை, 6.18 சதவீதமாக உயர்ந்து 7.40 கோடியாக அதிகரித்துள்ளது.
இதில் 5.16 கோடி பேர் பூஜ்ய வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கடந்த 2021-22ம் நிதிஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த நிதியாண்டிற்காக வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 6.18 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல் 20.33 சதவீதம் அதிகரித்து, 19.68 லட்சம் கோடியாக உயர்ந்திருந்தது.
வருமான வரி தாக்கல் தரவுகளின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2022-23ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 7.40 கோடிக்கும் அதிகமாகும். அதில் 5.16 கோடி பேர் பூஜ்ஜிய வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
வருமான வரித் தாக்கல் செய்தவற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தியதுடன், கணக்கு தாக்கல் செய்வதற்கும், உரிய வரிகளை செலுத்துவதற்கும், மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் வாயிலாக நினைவூட்டல்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் கணக்கு தாக்கலுக்கான விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்ட காரணங்களினால், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement