தனக்கு பேனர் வைத்தபோது பலியான 2 ரசிகர்களின் குடும்பத்தாருக்கு சூர்யா ஆறுதல்: எமோஷனல் வீடியோ

ஜூலை 23ம் தேதி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார் சூர்யா. அவரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் பேனர் வைத்தார்கள் ரசிகர்கள்.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் நரசராவ்பேட்டில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த என். வெங்கடேஷ், பி. சாய் ஆகியோர் சூர்யா ரசிகர்கள் ஆவர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாட அவர்கள் பேனர் வைத்தார்கள். அப்பொழுது மின்சாரம் தாக்கியதில் இருவருமே பலியானார்கள். இந்த சம்பவத்தால் சூர்யா ரசிகர்கள் அனைவரும் கவலை அடைந்தார்கள்.

தன் தம்பியின் மரணத்திற்கு கல்லூரி தான் காரணம் என சாயின் அக்கா அனன்யா தெரிவித்தார். அவர் கூறியதாவது,

மாணவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு. அவர்களின் நடவடிக்கைகளை கவனிப்போம் என கல்லூரி நிர்வாகம் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை காக்க கல்லூரி நிர்வாகம் தவறிவிட்டது. என் தம்பியின் மரணத்திற்கு கல்லூரி நிர்வாகமே பொறுப்பு என்றார்.

இந்நிலையில் பேனர் வைக்கும்போது இறந்த ரசிகர்களின் குடும்பத்தாருக்கு வீடியோ கால் செய்து ஆறுதல் கூறியிருக்கிறார் சூர்யா. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளாராம்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் சூர்யா வீடியோ காலில் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளனர் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள்.

தனக்காக ரசிகர்கள் இப்படி செய்வது சூர்யாவுக்கு சுத்தமாக பிடிக்காது. முதலில் உங்களின் குடும்பத்தாரை கவனியுங்கள் என தொடர்ந்து கூறி வருகிறார். உங்கள் வாழ்க்கை, உங்கள் பாதுகாப்பு தான் முக்கியம். அதன் பிறகே அடுத்தவர்களை கொண்டாடுங்கள் என தன் ரசிகர்களை வலியுறுத்தி வருகிறார் சூர்யா.

தன் பிறந்தநாளில் இரண்டு உயிர்கள் போனதில் வேதனை அடைந்திருக்கிறார் சூர்யா. சந்தோஷமாக துவங்கிய அந்த நாள் சோகத்தில் முடிந்துவிட்டது.

இதற்கிடையே சூர்யாவின் பிறந்தநாள் அன்று அவர் நடித்து வரும் கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

Suriya: முதல் சம்பளத்தில் சூர்யா என்ன வாங்கினார் தெரியுமா?

சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் சூர்யா வேற மாதிரி மிரட்டியிருக்கிறார். க்ளிம்ப்ஸை பார்த்தபிறகு கங்குவா மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துவிட்டது.

க்ளிம்ப்ஸுக்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்த சூர்யா தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார். கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸை பார்த்த பிறகு அது இந்தியில் மட்டுமே ரூ. 300 கோடி முதல் ரூ. 400 கோடி வசூலிக்கும் என பாலிவுட் சினிமா வர்த்தக வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர் என ஸ்டுடியோ கிரீன் நிறுவன சிஇஓ தனஞ்செயன் தெரிவித்துள்ளார். அது மட்டும் நடந்தால் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்துவிடலாம் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் கங்குவா படத்தை கொரியன், சைனீஸ் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் ரிலீஸ் செய்வது குறித்து விவாதம் நடந்து வருவதாக தனஞ்செயன் கூறியிருக்கிறார்.

க்ளிம்ப்ஸை பார்த்த தமிழ் ரசிகர்களோ, இத்தனை ஆண்டுகளாக இந்த ஐடியாவை எல்லாம் எங்கு மறைத்து வைத்திருந்தீர்கள் சிவா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.