பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயன்றாரா? உண்மையில் நடந்தது என்ன?

சென்னை: நடிகை பூஜா ஹெக்டேவின் படங்கள் தோல்வி அடைந்து வருவதால், ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலைக்கு முயற்சி செய்தாக செய்தி வெளியாகி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார்.

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாக முடியும் என்று எதிர்பார்த்து பூஜா ஹெக்டே காத்திருந்த நிலையில், படத்திற்கு நெகடிவ் கமெண்டுகள் வந்தால், தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் போனது.

நடிகை பூஜா ஹெக்டே: தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்து வரும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் அந்த அக்ஷன் காட்சிக்காக வெளிநாட்டு பயிற்சியாளரிடம் பயிற்சி எடுத்த வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

Beast movie heroine pooja hegde issues legal notice to Umair Sandhu

தற்கொலைக்கு முயன்றார்: இந்நிலையில் பிரபல விமர்சகரும், சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சந்து, நடிகை பூஜா ஹெக்டே, தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்ததால், மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியதாகவும் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

பொய்ய செய்தி: இந்தி செய்தி இணையத்தில் படுவேகமாக பரவியதை அடுத்து, பூஜா ஹெக்டே சார்பில் பொய்யான செய்தியை பரப்பியதற்காக உமர் சந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதனை உமர் சாந்து அந்த நோட்டிசையும் தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள், அடுத்தவர்களை பற்றி இப்படி பதிவிடுவது எல்லாம் ஒரு பொழப்பா என்று கருத்துக்களை கூறிவருகின்றனர்.

விஜய் சேதுபதி மீது பழி: இதே உமர் சந்துதான் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய்சேதுபதி மெரி கிறிஸ்துமஸ் படப்பிடிப்பின் போது நடிகை கத்ரீனா கைஃபிற்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தார் என்று பதிவிட்டு அவரது ரசிகர்களிடம் வாங்கி கண்டிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.