ஸ்டாலின் கையில் முக்கிய ரிப்போர்ட்: விஷயம் லீக்கானது எப்படி? அமைச்சர்களுக்கு விழுந்த டோஸ்!

அமலாக்கத்துறை சோதனை, கைது என்று தமிழக அமைச்சர்களை குறிவைத்து நடைபெறும் சம்பவங்கள் தமிழக அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ‘மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இதைவிட மோசமான கொடுமைகள் எல்லாம் வரும். அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்’ என்று செய்தியாளர்களிடையே ஸ்டாலின் கூறினார். தாக்குதல்கள் எதிரில் இருந்து வந்தால் சமாளிக்கலாம், அருகிலேயே அபாயங்கள் இருந்தால் என்ன செய்வது என்பது தான் ஸ்டாலினை தற்போது மிகவும் கலங்கடிக்கும் விஷயமாக இருக்கிறது என்கிறார்கள்.

செந்தில் பாலாஜி கஸ்டடி – பொன்முடி அப்செட்!செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் அவரது மகனும் எம்.பியுமான கௌதம சிகாமனியும் அமலாக்கத்துறை விசாரணையில் சமீபத்தில் ஆஜராகினர். உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டாலும் வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதால் பொன்முடி ரொம்பவே அப்செட் ஆகியுள்ளதாக சொல்கிறார்கள்.
ஸ்டாலினுக்கு கிடைத்த ரிப்போர்ட்!திமுகவுக்கு இதற்கு முன்னரும் வெவ்வேறு காலகட்டத்தில் மத்தியில் இருந்து எதிர்ப்பு வந்திருக்கிறது, கைது நடவடிக்கைகள் கழுத்தைச் சுற்றியுள்ளது. ஆனால் சட்டப்போராட்டம் நடத்தி அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. தற்போதும் திமுக வழக்கறிஞர் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள சில ரிப்போர்ட் அவரை சங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளதாக சொல்கிறார்கள்.
விஷயம் லீக் ஆனது எப்படி?அமைச்சர்களின் துறை ரீதியான செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது உளவுத்துறையிடம் ரிப்போர்ட் கேட்டுப் பெற்று அதற்கேற்ப சில அறிவுறுத்தல்களை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார். சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பார். தற்போது அவருக்கு சென்றுள்ள தகவலில் அமைச்சர்கள் ஓரிருவர் எதிர் தரப்போடு ராசியாகி இருப்பதாகவும் அதன் மூலம் சில முக்கிய விஷயங்கள் கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கண்கள் சிவந்த ஸ்டாலின்​​
உள்ளுக்குள் இருக்கும் ஈகோ, அதுமட்டுமல்லாமல் தன்னை குறிவைக்க வேண்டாம் என்பதற்காகவும் இப்படியான விஷயங்களில் இறங்கியுள்ளதாக தகவல் வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பாக காட்டமாக பேசியுள்ள ஸ்டாலின் பெயர் குறிப்பிடாமல் அமைச்சர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.