புதுடில்லி:அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித் துள்ளதை தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடி களில், இந்தியர்கள் மூட்டை மூட்டையாக அரிசி வாங்கி செல்லும், ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அரிசி ஏற்றுமதியில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது.வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்த ஏற்றுமதி அரிசியை நம்பியே உள்ளனர். இந்நிலையில், உள்நாட்டில் அரிசி விலையை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தில், பாசுமதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 20ம் தேதி தடை விதித்தது.
இதை தொடர்ந்து, சமூகவலைதளங்களில், ‘வீடியோ’ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவில் இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து, பதற்றத்துடன் அரிசி மூட்டைகளை வாங்கி செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அவர்கள், பல்பொருள் அங்காடியில் வைக்கப்பட்டுள்ள அடுக்குகளின் மேல் ஏறி நின்று அரிசி மூட்டைகளை போட்டி போட்டு அள்ளிச் செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தால், ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா, நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை அது நேரடியாக பாதிக்கும்.
ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதிப்பு இருக்குமா என்பது சந்தேகமே.
ஆனாலும், அங்கு வசிக்கும் இந்தியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரிசியை வாங்கிக் குவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement