சென்னை: Nayanthara (நயன்தாரா) நடிகை நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் ஒரு கண்டிஷன் போட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன் தாரா. பல பிரச்னைகளை சந்தித்த அவர் அனைத்தையும் கடந்து இன்று டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் தனது 75ஆவது படத்தில் விரைவில் நடிக்கவிருக்கும் அவர் ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். அட்லீ இயக்கத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் ரிலீஸாகவிருக்கிறது.
காதல், திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார் நயன். பல வருடங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டூ கெதரில் இருந்தார்கள். பிறகு ஒருவழியாக கடந்த வருடம் மகாபலிபுரத்தில் இரண்டு பேரும் பிரமாண்டமாக திருமணம் செய்த்கொண்டனர். ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அதில் கலந்துகொண்டனர்.
உயிர், உலக்: அதனையடுத்து நயன் தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். இரண்டு ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்வீக் N சிவன் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கிடையே அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது சர்ச்சையான சூழலில் விசாரணை நடந்தது. அதில் எந்த விதிமீறலும் இல்லை என்பது தெரியவந்தது.
குடும்ப பொறுப்பில் பிஸி: இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் நயன். பொறுப்பான தாயாக குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார். சமீபத்தில்கூட தனது மகனை அவர் கொஞ்சிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. சூழல் இப்படி இருக்க அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜவான் படத்தில் திருமணத்திற்கு முன்பே கமிட்டாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டிஷன் போட்ட விக்கி: இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன் தாராவுக்கு ஒரு கண்டிஷன் போட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, அட்லீ ஷாருக்கானை வைத்து படம் இயக்குவதற்கு கமிட்டானதும் நயனிடம் ஹீரோயினாக நடிக்க கேட்டிருக்கிறார். அதற்கு அவரும் ஒத்துக்கொண்டார். ஆனால் விக்னேஷ் சிவனோ பாலிவுட் சென்று நடித்தால் திருமணத்துக்கு மேற்கொண்டு லேட் ஆகும். அதனால் என்னை திருமணம் செய்துகொண்ட பிறகு நீ எங்கு வேணாலும் போ என்று விக்னேஷ் சிவன் கண்டிஷன் போட்டதாகவும், அதன் பிறகுதான் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பளத்தை ஏற்றிய நயன்: இதற்கிடையே குடும்ப பொறுப்பை கவனித்துக்கொண்டாலும் சினிமாவுக்கு ஒட்டுமொத்தமாக முழுக்கு போடும் ஐடியா இப்போதைக்கு நயனிடம் இல்லை என்றும்; இன்னும் சொல்லப்போனால் ஜவான் படத்தில் நடித்துவிட்டதால் அடுத்தடுத்த படங்களுக்கு தன்னுடைய சம்பளத்தை உயர்த்த அவர் திட்டமிட்டிருப்பதாகவும் புதிய தகவல் ஒன்று ஓடுவது குறிப்பிடத்தக்கது.