Suriya: சூர்யா தான் அடுத்த முதல்வரா ? பரபரப்பை கிளப்பிய சம்பவம்..கொந்தளித்த சிவகுமார்..!

​வெற்றிப்பாதைதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா இடையில் சில தோல்வி படங்களை கொடுத்து வந்தார். அந்த சமயத்தில் தான் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி சூர்யாவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து வெளியான ஜெய் பீம் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்த சூர்யாவை ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது

​பிரிந்த கூட்டணிபிதாமகன் படத்திற்கு பிறகு வணங்கான் படத்தின் மூலம் மீண்டும் சூர்யா மற்றும் பாலா கூட்டணி இணைந்தது. இப்படத்தை சூர்யாவே தயாரித்தார். நந்தா, பிதாமகன் படத்திற்கு பிறகு இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்ததால் ரசிகர்கள் வணங்கான் திரைப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் திடீரென வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பல மாதங்கள் கழித்து இப்படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது பாலா வணங்கான் படத்தை அருண் விஜய்யை வைத்து இயக்கி வருகின்றார்

​கங்குவாவணங்கான் படம் கைவிடப்பட்டதை அடுத்து சூர்யா தற்போது சிவாவின் இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகின்றார். மிகப்பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து வருகின்றார். பாலிவுட் பிரபலம் திஷா பதானி இப்படத்தில் நாயகியாக நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இரண்டு பாகங்களாக தயாராகும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது

​கண்டித்த சிவகுமார்ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடினர். இதைத்தொடர்ந்து சில ரசிகர்கள் சூர்யாவை வருங்கால முதல்வரே என குறிப்பிட்டு போஸ்டர்களை ஓட்ட அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போஸ்டர் சூர்யாவின் தந்தை சிவகுமாரின் கண்களில் பட அவர் உச்சகட்ட கோபத்திற்கு ஆளானார். இதையடுத்து ரசிகர்களை அழைத்து இதுபோல இனி நடக்கக்கூடாது என கடுமையாக கண்டித்தார். மேலும் சூர்யாவிடமும் இதுபோல நடக்காமல் பார்த்துக்கொள்ளவும் எனவும் எச்சரித்தார். இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் அந்த போஸ்ட்டரை தற்போது அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.