Vasanathabalan – நொந்து போயிருந்த வசந்தபாலன்.. தேற்றிய இயக்குநர் ஷங்கர்.. அப்படி என்ன சொன்னார்?

சென்னை: Vasanathabalan (வசந்தபாலன்) இயக்குநர் வசந்தபாலன் நொந்து போயிருந்த சமயத்தில் ஷங்கர் சொன்ன வார்த்தைகள் வசந்தபாலனை தேற்றியிருக்கிறது.

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் வசந்தபாலன். இந்தியன், ஜீன்ஸ், பாய்ஸ் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அவர் ஆல்பம் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். முதல் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து பல ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமலே இருந்தார் வசந்தபாலன்.

வெயிலோடு விளையாடி: அந்த சமயத்தில் வசந்தபாலனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது இந்த சமூகம் வெற்றி பெற்றவர்களை மட்டும்தான் பேசுகிறது. தோற்று போனவர்களை பற்றி ஏன் பேச மறுக்கிறது. தோற்று போனவரை பற்றி ஒரு படம் எடுத்தால் என்ன என்று நினைத்து வெயில் கதையை எழுதினார். பரத், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து வசந்தபாலன் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார்.

தரம் வாய்ந்த படங்கள்: வெயில் படத்துக்கு பிறகு தனது அடியை கவனமாக எடுத்து வைக்க ஆரம்பித்தார் வசந்தபாலன். அதன்படி அவர் இயக்கத்தில் வெளியானது அங்காடித் தெரு படம். அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிய பெரியது. யாரும் பெரிதாக கண்டுகொள்ளாத துணி கடையில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் உருவாகியிருந்தது. படம் மெகா ஹிட்டாகி வசந்தபாலன் படம் என்றால் தரமான படமாகத்தான் இருக்கும் என்ற கருத்து எழ ஆரம்பித்தது.

தோல்வி முகம்: இருப்பினும் அதற்கு பிறகு அவர் இயக்கிய அரவான், காவிய தலைவன் போன்ற படங்கள் சிறந்த கதைக்களமாக இருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதால் படம் தோல்வியை சந்தித்தது. அதேபோல் கடைசியாக அவர் இயக்கிய ஜெயில் படமும் தோல்வியை சந்தித்தது. இப்படி அவருக்கு மீண்டும் தோல்வி முகம் தோன்றியது. இந்தச் சூழலில் அவர் இயக்கத்தில் சமீபத்தில் அநீதி படம் வெளியானது.

நல்ல ரெஸ்பான்ஸ்: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்த அநீதி படமும் யாரும் தொடாத கதைக்களத்தை தொட்டிருக்கிறது. டெலிவரி பாய்ஸின் வாழ்க்கையை இந்தப் படத்தின் மூலம் வசந்தபாலன் பேசியிருக்கிறார். இதன் காரணமாக படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. எனவே நீண்ட வருடங்கள் கழித்து அவர் கம்பேக் கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

ஷங்கர் சொன்ன அட்வைஸ்: இந்தச் சூழலில் தொடர் தோல்விகளால் வசந்தபாலன் நொந்து போயிருந்தபோது இயக்குநர் ஷங்கர் அவரை தேற்றியது தெரியவந்திருக்கிறது. அதாவது ஒருமூறை வசந்தபாலனும், ஷங்கரும் பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது வசந்தபாலனிடம் ஷங்கர், “டேய் இந்த உலகத்துல ரெண்டு வகையான ஃபிலிம் மேக்கர்ஸ் இருக்காங்க. ஒரு வகையினர் மக்களுக்கு பிடித்த சினிமாவை எடுப்பவர்கள். இரண்டாவது வகையினர் தனக்கு பிடித்த சினிமாவை எடுத்து மக்களுக்கு பிடிக்க வைப்பவர்கள்.

 Vasanathabalan Shares a Memories with Director Shankar

நீ இரண்டாவது வகையை சேர்ந்தவன். அதனால் நீ கவலைப்படக்கூடாது. நீ ரசிகர்களுக்கு பிடிக்கும் படம் எடுக்கவில்லை. உனக்கு பிடித்த படத்தை எடுத்து ரசிகர்களுக்கு பிடிக்க வைக்கிற. இதுதான் வாழ்நாள் முழுவதும் நிற்கும். இதனால் நீ ஒரு விஷயத்துக்கும் கவலைப்படாதே. எல்லா படங்களும் கரணம் தப்பினால் மரணம்தான். அது கமர்ஷியல் படங்களுக்கும் நடக்கும். அப்புறம் ஏன் கவலைப்படுற” என சொல்லியிருக்கிறார்.

இதனைக் கேட்ட வசந்தபாலன், ஆமா நாம் கமர்ஷியல் படம் எடுத்து ஃப்ளாப் கொடுக்குறதவிட நல்ல படம் எடுத்தோம் என்ற எண்ணம் தோன்றி சாந்தமானாராம். இந்த சம்பவத்தை வசந்தபாலன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.