வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 2023 ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதியில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) வரும் அக்., 5-நவ., 19ல் நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
![]() |
உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக். 15ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் மோடி மைதானத்தில் நடக்கவுள்ளது. ஆனால் அக். 15ல் இங்கு, நவராத்திரி கொண்டாட்டம் துவங்குகிறது.
இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா, பாகிஸ்தான் மோதலை ஒரு நாள் முன்னதாக, அக். 14ல் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது. இது குறித்து கிரிக்கெட் செயலாளர் ஜெயிஷா கூறியது, போட்டி திட்டமிட்டபடி அக். 15ல் நடக்கவும் தேதி மாற்றம் குறித்து முடிவு எடுக்கவில்லை என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement