ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் சென்சார் சம்பந்தமான தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜெயிலர்தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினி நடிப்பில் அடுத்ததாக ‘ஜெயிலர்’ என்ற படம் ரிலீசாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் பாடல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வேறலெவல் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ரிலீசுக்கு தயாராகவுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்து வருகிறது.
ரஜினியுடன் இணைந்த நெல்சன்’அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப்படத்தின் ரிலீசை கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற டார்க் காமெடி படங்களை இயக்கி கவனம் ஈர்த்த நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ உருவாகியுள்ளது.
ஜெயிலர் ஆடியோ லான்ச்’ஜெயிலர்’ படத்தின் முதல் சிங்கிளாக ‘காவாலா’ பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியது. தமன்னாவின் அசத்தலான நடனத்தில் அனிருத் இசையில் வெளியானது இந்தப்பாடல். இதனை தொடர்ந்து ஹுக்கும், ஜுஜுபி என மாஸ் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இதனிடையில் நாளைய தினம் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘ஜெயிலர்’ ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.
ஜெயிலர் சென்சார்இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்தப்படத்திற்கான சென்சார் பணிகள் நிறைவடைந்து யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் இந்த சர்டிபிகேட் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நெல்சன் தன்னுடைய வழக்கமான பாணியில் இல்லாமல் ஜெயிலர் படத்தினை ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இயக்கியுள்ளார்.
பல மொழி பிரபலங்கள்’ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அத்துடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட சினிமாவை சார்ந்த சிவராஜ்குமார், பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷெரப், சுனில் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரீலிசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.