பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரணின் மனைவி உபாசனா நடிகை தமன்னாவுக்கு உலகின் 5வது பெரிய வைர மோதிரத்தை பரிசாக அளித்தார் என கடந்த சில நாட்களாக பேச்சாக உள்ளது. மேலும் ஒரு பேப்பர் வெயிட் அளவுக்கு பெரிய வைர மோதிரத்துடன் தமன்னா போஸ் கொடுத்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
“கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview !
அடேங்கப்பா, உபாசனாவுக்கு தான் எவ்வளவு பெரிய மனசு. ரூ. 2 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை பரிசாக கொடுத்திருக்கிறாரே என ரசிகர்கள் வியந்து பேசினார்கள். இது குறித்து அறிந்த தமன்னா வைர மோதிரம் பற்றிய ரகசியத்தை போட்டுடைத்துவிட்டார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்த வைர மோதிர புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டு தமன்னா கூறியிருப்பதாவது, அது நிஜமான வைரம் இல்லை, பாட்டில் ஓபனர். அதை வைத்து போட்டோஷூட் செய்தோம். பெண்களுக்கு புகைப்படங்கள் எடுக்கப் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
தமன்னா அந்த பாட்டில் ஓபனரை அணிந்திருக்கும் புகைப்படத்தை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி ட்விட்டரில் வெளியிட்டு உபாசனா கூறியதாவது,
சூப்பர் தமன்னாவுக்கு திருமதி தயாரிப்பாளரிடம் இருந்து ஒரு பரிசு. உங்களை ஏற்கனவே மிஸ் பண்ணுகிறேன். விரைவில் சந்திப்போம் என்றார்.
சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார் தமன்னா. அந்த படத்தை ராம் சரண் தயாரித்திருந்தார். சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தபோது தான் தமன்னாவுக்கு உபாசனா இந்த வைரத்தை கொடுத்தார் என பேசப்பட்டது.
ஆனால் உபாசனா ட்வீட் போட்ட உடனேயே தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார். அது பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.
உபாசனா ட்வீட் போட்ட மறுநாள் தமன்னா ட்விட்டரில் கூறியதாவது, இந்த பாட்டில் ஓபனருடன் நிறைய நினைவுகள் உள்ளது. ரொம்ப காலம் கழித்து சந்தித்ததில் மகிழ்ச்சி. விரைவில் உங்களை சந்திக்கிறேன். அதிகமாக மிஸ் பண்ணுகிறேன் என்றார்.
அது பாட்டில் ஓபனர் என தமன்னா அப்பொழுதே கூறியபோதிலும் அவர் வைர மோதிரத்தை தான் சொல்கிறார் என்பது பலரும் புரியாமல் போய்விட்டது.
ஒரு பாட்டில் ஓபனரையா இத்தனை ஆண்டுகளாக வைரம் என்று நம்பினோம் என ரசிகர்கள் நொந்துவிட்டார்கள். தமன்னா தற்போது பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார். அதற்கு காரணம் காவாலா.
ஜெயிலர் படத்திற்காக தமன்னா டான்ஸ் ஆடிய காவாலா பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டது. பள்ளிக் குழந்தைகள், நடக்கக் கூட ஆரம்பிக்காத குழந்தைகள் முதல் பாட்டிமார்கள் வரை காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
Tamannaah:விஜய் ஒரு பச்சோந்தி: தமன்னா
கெரியரில் காவாலாவால் மகிழ்ச்சியாக இருக்கும் தமன்னா தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் வந்திருப்பதால் சந்தோஷமாக இருக்கிறார். லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப்தொடரில் தன்னுடன் சேர்ந்து நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தான் காதலிக்கிறார் தமன்னா.
Vijay Varma:எப்ப கல்யாணம்னு அம்மா கேட்டுக்கிட்டே இருக்காங்க: தமன்னாவின் காதலர் விஜய்
எப்பொழுது திருமணம் செய்து கொள்வாய் என விஜய்யிடம் அவரின் அம்மா தொடர்ந்து கேட்டு வருகிறாராம். இந்நிலையில் மாமியார் ரொம்ப ஆசைப்படுகிறார், விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டியது தான் என தமன்னா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.