அண்ணமலையின் நடை பயணத்திற்கு தேமுதிக ஆதரவு… பங்கேற்பது யார்? விஜயகாந்த் அறிவிப்பு!

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை என் மக்கள் என் மண் என்ற தலைப்பில் இன்று தனது நடைபயணத்தை தொடங்குகிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த நடைபயணத்தை பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தொடங்கி வைக்கிறார்.

இந்த நடை பயணத்தில் பங்கேற்குமாறு அண்ணாமலை கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவர் வேறொரு நாளில் பங்கேற்பார் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதேபோல்

வுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜக மாநில துணை தலைவர் கரு. நாகராஜன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து நேற்று அழைப்பு விடுத்தார். பாஜக தலைவர் அண்ணாமலை தொலைபேசி வாயிலாக பேசியில் பேசி ஆதரவு கோரினார்.

அண்மையில் டெல்லியில் நடந்த பாஜக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் அண்ணாமலையின் இந்த பாத யாத்திரை பயணத்திற்கு தேமுதிக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் அக்கட்சியின் தலைவரான

, இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்கவுள்ள நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதாக குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநில துணை செயலாளர் கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்றும் விஜயகாந்த் தனது டிவீட்டில் தெரிவத்துள்ளார். அண்ணாமலையின் நடைபயணம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.