பாஜகவின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, அஸ்திவாரத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தி கொண்டு வந்ததை குறிப்பிடலாம். இதற்காக 80களின் தொடக்கத்தில் இருந்தே தீவிரமாக களப்பணியாற்றியது. அதன்பிறகு மத்தியில் நிலையான ஆட்சியை பெற 18 ஆண்டுகள் ஆனது. இதையடுத்து தாங்கள் கால் பதிக்காத மாநிலங்களில் கட்சியின் வளர்ச்சிக்கு விதை போட ஆரம்பித்தனர்.
அமித் ஷாவின் எழுச்சிகிராமங்களில் இருந்து ஆரம்பித்து பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, சமூக ரீதியிலான தலைவர்களை அடையாளம் காண்பது, அதிருப்தி தலைவர்களை வளைப்பது, ஆபரேஷன் லோட்டஸ் என கடுமையாக வேலை செய்தனர். பின்னர் 2014 தேர்தலின் போது மோடி அலையை உருவாக்கி மக்களின் கவனத்தை ஈர்த்தனர். அப்போது அமித் ஷாவின் எழுச்சியும், தேர்தல் வியூகமும் எதிர்க்கட்சிகளை திணறடித்தது.அண்ணாமலைக்கு வாய்ப்புகடந்த 9 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய கட்சி என்ற அந்தஸ்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 2024 மக்களவை தேர்தலுக்கு தங்கள் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லும் பணியில் ஒவ்வொரு மாநிலமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் ஆழமாக வேரூன்ற வேண்டும் என்று அண்ணாமலை மூலம் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ் ஆகியோர் களம் அமைத்து கொடுத்துள்ளனர்.
தமிழக பாஜகவின் நடைபயணம்கடந்த 2 ஆண்டுகளாக பேசியே தலைப்பு செய்தியாக மாறிய அண்ணாமலை, அடுத்த 6 மாதங்கள் நடந்தே பேசுபொருளாக மாறப் போகிறார். ”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் ராமேஸ்வரத்தில் இன்று தொடங்கவுள்ள நடைபயணத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்தில் விரிவான களம் அமைத்து அடுத்த 6 மாதங்களுக்கு தீவிரமாக வேலை செய்ய திட்டமிட்டுள்ளது.
ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்மறுபுறம் தமிழகத்தில் ஆளும் திமுக என்ன செய்யப் போகிறது? எப்படி பாஜகவை எதிர்கொள்ளப் போகிறது? போன்ற கேள்விகள் எழுகின்றன. இதையொட்டியே திருச்சி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதற்காக தடபுடலாக அசைவ விருந்து வைத்து அமைச்சர் கே.என்.நேரு ஆச்சரியப்பட வைத்தது வேறு கதை. இந்த கூட்டத்தில் முகவர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்கள் கிட்டதட்ட அமித் ஷாவின் பாணி என அரசியல் விமர்சகர்கள் கூறுவதை கேட்கலாம்.
திமுக உ.பி.,க்கள் வேற லெவல்இருப்பினும் திராவிட சித்தாந்தத்தை பேசி பேசி ஆட்சியை பிடித்த எங்களுக்கு பாஜக ஒன்றும் பாடம் நடத்த தேவையில்லை. எங்கள் வியூகம் தனி ரகம் எனக் கூறிக் கொண்டு திமுக உடன்பிறப்புகள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். அதாவது, முன்களப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஸ்டாலின் அப்படி என்னென்ன சொல்லியிருக்கிறார் எனக் கேள்வி எழலாம். திமுகவின் ஈராண்டு சாதனைகள் என்ற பெயரில் மாநிலம் தழுவிய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
வாக்காளர்களை கவருதல்வாக்குச்சாவடி முகவர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு வாக்காளரின் முழுமையான விவரத்தை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 10 வீடுகளுக்கு சென்று திமுக அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணி நேரம் வாக்காளர்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பில் இருக்க வேண்டும். மக்களிடம் இருந்து வாக்குச்சாவடி முகவர்கள் கேட்டறிந்து கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள திமுக நிர்வாகி முதல் எம்.எல்.ஏ, அமைச்சர் வரை உரிய தீர்வு காணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
திமுக தலைமை போட்ட கணக்குஇதை அனைவரும் கைகோர்த்து செய்தால் மட்டுமே சாத்தியம் என்று மு.க.ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கியுள்ளார். இவற்றை கச்சிதமாக செய்துவிட்டால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுக ஆதரவு வாக்குகள் குவிவதை யாராலும் தடுக்க முடியாது என கட்சி தலைமை கணக்கு போட்டு வைத்திருப்பதாக பேசப்படுகிறது.