ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான
, ராமநாதபுரம் மக்களவை தொகுதி மிகவும் முக்கியமானது. பல்வேறு தருணங்களில் இந்த தொகுதியை புதுப்பித்து வந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றிருக்கும் அதிமுகவின் தயவில் இயங்கும் கூட்டணியே ராமநாதபுரத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ராமநாதபுரம் தொகுதியில் மோடி
இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது எனக் கேட்கலாம். கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடலாம் என்று பாஜக தரப்பே கூறி வருகிறது. ஏனெனில் புனித பூமியான காசி இருக்கும் வாரணாசியில் போட்டியிட்டு வென்று விட்டார். இதேபோல் தென்னிந்தியாவின் புனித பூமியாக திகழும் ராமேஸ்வரம் இருக்கும் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலை நடைபயணம்
ஆனால் கட்சி மேலிடம் இன்னும் உறுதி செய்யவில்லை. அதேசமயம் ராமநாதபுரத்தை மையமாக வைத்து பாஜக சில காய் நகர்த்தல்களை செய்து வருகிறது. இன்று கூட ”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் வந்து தொடங்கி வைத்திருக்கிறார். இது ஒருபுறம் இருக்கட்டும்.
ராமநாதபுரம் தொகுதி நிலவரம்
ராமநாதபுரத்தில் உண்மை நிலவரம் என்ன? பாஜக சார்பில் மோடி உள்ளிட்ட யாராவது நின்றால் வெற்றி பெறுவார்களா? இங்கு வெல்வதற்கு அதிமுகவின் தயவு கட்டாயம் தேவையா? என தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ராமநாதபுரம் தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். மேலும் தேவர் சமூக மக்களும் அதிக அளவில் உள்ளனர். எனவே தான் முத்துராமலிங்க தேவரை கொண்டாடும் தேவர் ஜெயந்திக்கு பாஜக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
தேவரும், அதிமுகவும்
தேவர் ஜெயந்தி என்றாலே அதிமுகவும், ஜெயலலிதா அளித்த தங்க கவசமும் தான் நினைவில் தோன்றும். அந்த அளவிற்கு அரசியல் ரீதியாக ஒரு பிணைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இதுதவிர தேவேந்திர குல வேளாளர்கள் இருக்கின்றனர். இவர்களை குறிவைக்கும் வகையில் 7 சாதியினரை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கும் படி மக்களவையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது மத்திய பாஜக அரசு.
பாஜக அரசியல் கணக்கு
மேலும் மீனவர்களும் வாக்குகளும் கணிசமான அளவில் உள்ளனர். இவர்களை குறிவைப்பது பாஜகவிற்கு சரிவராது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மற்ற இரண்டு பிரிவினரை குறிவைப்பது எளிது. ஆனால் வாக்குகளாக அறுவடையாகுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த இரு சமூகத்தினரும் அதிமுகவிற்கு சாதகமான பார்வையை கொண்டிருக்கின்றனர்.
கே.பி.முனுசாமி பேச்சு
ஆனால் சசிகலா, டிடிவி தினகரன்,
என அணி அணியாக பிரித்து நடத்தப்பட்ட ஆபரேஷனில் பாஜகவிற்கு தாவினாலும் ஆச்சரியப்படுவதிற்கு இல்லை. இத்தகைய சூழலில் ராமநாதபுரத்தில் அதிமுகவின் தயவு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பது போல் கே.பி.முனுசாமி பேசியிருப்பதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என்கின்றனர்.