மும்பை:விமான சேவை, பயிற்சி மற்றும் பொறியியல் ரீதியான குறைபாடுகளுக்கான இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தலைநகர் புதுடில்லி, மும்பை, சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே விமான சேவையை இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ‘ஏ – 321’ என்ற விமானம் புறப்படும் போதும், தரை இறங்கும் போதும், அதன் வால் பகுதி தரை தட்டியதாக புகார் எழுந்தது. கடந்த ஆறு மாதத்தில் நான்கு முறை இது போன்று நடந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, இண்டிகோ விமான நிறுவனத்தில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் சமீபத்தில் சோதனை நடத்தியது.
இதில், முறையாக விமானங்களை இயக்காதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
பொறியியல் நடைமுறைகள், பயிற்சி அளித்தல் உட்பட பல்வேறு விவகாரங்களில் குறைபாடுகள் குறித்து அந்நிறுவனத்துக்கு ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் விதிகளை முறையாக பின்பற்றுமாறும் இண்டிகோ நிறுவனத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement