Captain Miller Teaser: ப்ரேமுக்கு ப்ரேம் மிரட்டல்.. கொல மாஸ்: கேப்டன் மில்லராக மிரள விடும் தனுஷ்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் இன்று தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆரம்ப காலத்தில் தனது தோற்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட தனுஷ், இன்று நடிப்பு அசுரனாக ஹாலிவுட் சினிமா வரை சென்று தடம் பதித்துள்ளார். கதையின் நாயகனாக மாறி தனுஷ் உயிர் கொடுத்த கதாபாத்திரங்கள் ஏராளம். அந்த வகையில் தற்போது கேப்டன் மில்லரில் மிரட்டலான நடிப்பை வழங்கி அதிர வைத்துள்ளார்.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த முன்னோட்ட வீடியோ நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகி கோலிவுட் சினிமாவையே மெர்சலாக்கியுள்ளது. 1.33 நிமிடம் ஓடும் இந்த டீசர் முழுக்க துப்பாக்கி குண்டுகள் சத்தம், போராட்டம் என அதிரடியாய் வெளியாகியுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தனுஷின் தோற்றமும், அவர் துப்பாக்கியை கையாளும் விதமும் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. அதே போல் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் சந்தீப் கிஷனின் இன்ட்ரோ காட்சிகள் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. வெறும் டூயட் பாடும் ஹீரோயினாக இல்லாமல் இந்தப்படத்தில் வேறு விதமான பிரியங்கா அருள் மோகனை பார்க்கலாமல் என்பதும் டீசரிலே தெளிவாக தெரிகிறது.

டீசர் முழுக்க வெடிக்கும் துப்பாக்கி குண்டுகள் ‘கேப்டன் மில்லர்’ படம் வேறு விதமான கதைக்களம் என்பதை தெள்ளத்தெளிவாக உறுதி செய்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவலின்படி 1930 ஆம் ஆண்டுகளில் நடக்கும் கதைக்களம் போலவே படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. போருக்கு முக்கியத்தும் கொடுத்தும், விடுதலைக்காக போராடும் இந்தியர்கள் சிந்தும் இரத்தத்தையும் முக்கியமாக கொண்டு ‘கேப்டன் மில்லர்’ படம் உருவாகியுள்ளது டீசரை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது.

Dhanush: தனுஷ் பர்த்டே ட்ரீட்.. பட்டையை கிளப்பும் அப்டேட்கள்: பரபரக்கும் சோஷியல் மீடியா.!

மொத்தத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு பக்காவான பர்த்டே ட்ரீட்டாக இந்த டீசர் அமைத்துள்ளது. தமிழ் சினிமாவில் ராக்கி, சாணிக்காயிதம் போன்ற ராவான படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரனின் மூன்றாவது படைப்பாக ‘கேப்டன் மில்லர்’ படம் உருவாகியுள்ளது. அருணின் முந்தைய படங்கள் பெரியளவில் பேசப்பட்ட அளவிற்கு கமர்ஷியல் ரீதியாக பெரிதாக போகவில்லை. அந்த குறையை இந்தப்படம் மாற்றும் என உறுதியாக நம்பப்படுகிறது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தனுஷின் சினிமா கெரியரில் மிகப்பெரிய பொருட்செலவில் இந்தப்படம் தயாராகியுள்ளது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப்படம் மூன்று பாகங்களாக வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ‘கேப்டன் மில்லர்’ படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jailer: ‘ஜெயிலர்’ படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.?: மாஸ் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.