சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியான 45 நிமிடத்திலேயே தரமான சம்பவத்தை செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், கோலிவுட், பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் தடம் பதித்து மாஸ்காட்டி வருகிறார்.
தனுஷின் நடிப்பில் கடைசியாக வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
கேப்டன் மில்லர்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 1930 மற்றும் 40 காலகட்டத்தில் எடுக்கப்படும் படமாகும். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பெரிய பட்ஜெட்: கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை சர்வதேச சினிமா ரசிகர்களையும் கவரக்கூடும் என்பதால், தயாரிப்பாளர்கள் படத்திற்கு ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளனர். தனுஷ் இதுவரை நடித்த படங்களை விட இத்திரைப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சாதனை படைத்த டீசர்: தனுஷின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு கேப்டன் மில்லன் திரைப்படத்தின் டீசர் அதிரடியாக வெளியானது. டீசரில் கேஜிஎப் பெரியம்மா கன்னுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கன்னுடன் மிரட்டி உள்ளார் தனுஷ். இந்த டீசர் நள்ளிரவு வெளியான போதும், டீசர் வெளியான 45 நிமிடத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தனுஷின் பிறந்த நாளுக்கு வெளியான இந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் டிசம்பர் 15ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.