நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவினை தொகுத்து வழங்கிய நடிகர் கவின் யோகிபாபுவிடம், ‘நெல்சனுக்கு மட்டும் டேட் கரெக்ட்டா தரீங்களாமே ?’ என்று கேட்க, அதற்கு யோகி பாபு, “50 நாள் டேட் கேட்டாரு, 50 நாளும் விடமா வந்துட்டேன். கோலமாவு கோகிலா 2 வரும் என்று சொல்லிருக்கார். பார்போம்..!” என்று கூறினார்.

இதையடுத்துப் பேசிய ரம்யா கிருஷ்ணன், “24 வருசத்துக்குப் பிறகு ரஜினி சார் கூட படம் பண்ணுறேன். எனக்கு நிறைய வித்தியாசமானக் கதாபாத்திரங்கள் கிடைக்க மிக முக்கிய காரணமா அமைந்தது படையப்பா படம்தான். ரஜினி சாரோட எனர்ஜி, ஒழுக்கம்னு எதுவுமே மாறல. ரஜினி சார்தான் முதல்ல செட்டுக்கு வருவார். அவர்தான் கடைசியா போவார். அப்ப பார்த்த மாதிரியே இருக்காரு. இப்போ இருக்குற இயக்குநர்கள் எல்லாம் நைட் ஷூட் தான் அதிகம் ஆர்வம் காட்டிட்டு இருக்காங்க ” என்று கூறினார்.
‘படையப்பா படத்துல பழி வாங்குவேன் சொல்லி தான் முடிப்பீங்க? இந்தப் படத்தல அதைப் பண்ணிருக்கீங்களா’ என்று கேட்க, அதற்கு ரம்யா கிருஷ்ணன், “அதை ஆகஸ்ட் 10-ம்தேதி பாப்பீங்க” என்றார்.