நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய இயக்குநர் நெல்சன், “ஜானி மாஸ்டர் பேசுறது எனக்குப் புரியாது. நான் பேசுறது அவருக்கு புரியாது. அவர் 5 மொழி கலந்து ஒண்ணா பேசுவாரு. ஆனா நாங்க 4 பாட்டு பண்ணிட்டோம். நான் என்னமோ பெரிய இயக்குநர் மாறி ஒரு பீல் கொடுப்பாரு அனிருத்.
அவர் ஸ்டுடியோல 4 பசங்க இருப்பாங்க, அவங்க எப்போமே ஜாலியா இருப்பாங்க. அவங்களப் பாத்தா ‘உங்க வாழ்கையில எல்லாம் பிரச்னையே வரதா?’ என்று தோணும். வீடியோ கேம்ஸ்லாம் வேற விளையாடுவாங்க. அய்யயோ குழந்தைங்க கிட்ட படத்தைக் கொடுத்துடோம்மேனு தோணும். ஆனா, தலைவர் படம் அப்படிங்கிறதால ‘extra special’ -ஆ பண்ணிட்டு இருக்காங்க.

தமன்னா மேம்க்கு இதுல சின்ன ரோல் தான். அதை நல்லா பண்ணிக் கொடுத்திருங்க. எத்தனை ஹீரோயின் இதுக்கு ஒகே சொல்லுவாங்க தெரியல” என்றார்.
மேலும் விஜய் குறித்துப் பேசிய நெல்சன், “விஜய் சார்தான் முதல்ல எனக்கு நம்பிக்கை கொடுத்தாரு. ரஜினி சாரைப் போயி மீட் பண்ணுங்க அவர் கட்டாயம் படம் பண்ணுவாருனு சொன்னாரு” என்று பேசியுள்ளார்.