LGM Twitter Review: தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்த எல்.ஜி.எம். எப்படி?: ட்விட்டர் விமர்சனம்

தல என தன்னை கொண்டாடும் தமிழக மக்களின் பாசத்திற்காக தோனி தயாரித்திருக்கும் தமிழ் படம் எல்.ஜி.எம். ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த எல்.ஜி.எம். படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று ரிலீஸாகியிருக்கிறது.

“கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview !
தல தோனி தயாரித்த படத்தை பார்க்காமல் இருக்க முடியுமா என பலரும் தியேட்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். எல்.ஜி.எம். படத்தை பார்ப்பவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

எல்.ஜி.எம். பற்றி ட்விட்டரில் கூறப்பட்டிருப்பதாவது,

தோனி சொன்னது போன்று குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது. அம்மா, மகனாக நதியாவும், ஹரிஷ் கல்யாணும் அசத்துகிறார்கள்.

ஹரிஷ் கல்யாண், இவானா இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. ஜாலியாக பார்க்கும் படம்.

படத்தின் திரைக்கதை வலுவாக இல்லை. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். புது ஐடியா தான் என்றாலும் அதை திரையில் காட்டிய விதத்தில் இயக்குநர் தடுமாறிவிட்டார்.

ஹரிஷ் கல்யாணை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. அவருக்கு இந்த படம் நிச்சயம் கை கொடுக்கும் என நம்பினார். தல நீங்கள் தமிழ் படத்தை தயாரித்தால் மட்டும் போதாது கதை தேர்விலும் கவனமாக இருக்கவும். இந்த கதை உங்கள் மனைவி சாக்ஷியின் ஐடியா என்றார்கள்.

ஐடியா நன்றாக இருக்கிறது. ஆனால் படமாக பார்க்கும்போது அந்த ஈர்ப்பு வரவில்லை. சூதானமாக இருங்க தல. ஓடியோடி சம்பாதிச்ச காசு என தெரிவித்துள்ளனர்.

போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் குழப்பமாக வானத்தை பார்த்தபடி போஸ் கொடுத்தது ஏன் என தற்போது தான் புரிகிறது என சிலர் கூறியிருக்கிறார்கள்.

அம்மா நதியா வளர்க்கும் மகன் ஹரிஷ் கல்யாண் வாழ்வில் காதல் வருகிறது. தன் காதலி இவானாவை திருமணம் செய்து கொண்டு அம்மாவுடன் ஒரே வீட்டில் வசிக்க ஆசைப்படுகிறார் ஹரிஷ் கல்யாண். அம்மாவுடன் ஒரே வீட்டில் இருப்பதா, முடியவே முடியாது என்கிறார் இவானா. அதை கேட்ட ஹரிஷ் கல்யாணோ, அம்மாவை விட்டு வர முடியாது என கூறுகிறார்.

இதையடுத்து நதியாவை புரிந்து கொள்ள அவருடன் ஒரு ட்ரிப் கிளம்புகிறார் இவானா. அந்த ட்ரிப்பில் என்ன நடக்கிறது, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை தான் திரையில் காட்டியிருக்கிறார் புதுமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி.

முன்னதாக சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தோனி தன் பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். மேலும் யோகி பாபுவுடன் சேர்ந்து கேக் வெட்டி அவருக்கு கொடுக்காமல் தான் மட்டும் சாப்பிட்டு ஃபன் செய்தார்.

Dhoni: ஹீரோவாக நடிக்க தோனி ரெடி, ஆனால்…: மனைவி சாக்ஷி

இசை வெளியீட்டு விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தோனி தான். இந்நிலையில் நல்ல கதை கிடைத்தால் ஹீரோவாக நடிக்க தோனி தயாராக இருப்பதாக சாக்ஷி தெரிவித்துள்ளார். ஆக்ஷன் கதைகளையே தோனி விரும்புகிறாராம். அதனால் விரைவில் தோனியை ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.