Jailer: ரஜினியிடமிருந்து மைக்கை வாங்கி பேசிய ரம்யா கிருஷ்ணன்: அரங்கை அதிர வைத்த ரசிகர்கள்.!

ரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் வைத்து பிரபலங்கள் பேசியது தான் சோஷியல் மீடியா முழுக்க வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ‘ஜெயிலர்’ ஆடியோ லான்ச்சில் வைத்து நடிகை ரம்யா கிருஷ்ணன் செய்துள்ள காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளார். ‘படையப்பா’ கூட்டணியான இவர்கள் பல ஆண்டுகள் மத்தியில் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆடியோ லான்ச்சில் நடிகர் ரஜினிகாந்த் மாஸ் ஸ்பீச் கொடுத்தார். குட்டி ஸ்டோரி, சூப்பர் ஸ்டார் பட்டம், படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் என பலவற்றை பகிர்ந்தார். அப்போது ரஜினி பேசி கொண்டிருக்கும் போது மேடையேறிய நடிகை ரம்யா கிருஷ்ணன் மைக்கை வாங்கினார்.

படையப்பா படத்தில் பிரபலமான டையலாக்கை, ‘வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்கிட்டதான் இருக்கும். உன் கூடவே பிறந்தது. எங்கேயும் போகாது’ என பேசினார். இதனைக்கேட்டு ஒட்டுமொத்த ரசிகர்களும் அரங்கம் அதிர ஆரவாரம் செய்தனர். அதனை தொடர்ந்து பேசிய ரஜினி, சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு தொல்லை தான். ஹுக்கும் பாடலில் இடம்பெற்ற வார்த்தையை நீக்க சொன்னதாக தெரிவித்தார்.

Jailer: அடுத்த சூப்பர் ஸ்டார்: ‘ஜெயிலர்’ மேடையில் அனல் பறக்க பேசிய கலாநிதி மாறன்.!

மேலும், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்தார் ரஜினிகாந்த். அவரை புகழ்ந்து தள்ளியதுடன், என்னுடைய சினியா கெரியரை செதுக்கிய இயக்குனர்களின் பட்டியலில் நெல்சனும் உள்ளார் என தெரிவித்துள்ளார். ‘ஜெயிலர்’ ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அடுத்த வாரத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், மலையாள பிரபலம் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷெரப், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் நடித்துள்ள ‘ஜெயிலர்’ வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Jailer Audio Launch: காக்கா, கழுகை வைத்து ரஜினி சொன்ன குட்டி ஸ்டோரி: தரமான பதிலடி.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.