சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒsளிபரப்பாகி வருகிறது சகரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், அபிராமி மற்றும் சைந்தவி ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் போட்டியாளர் பிரவீன் குடும்பத்தில் சோகம்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், அபிராமி மற்றும் சைந்தவி ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார் பிரவீன். தன்னுடைய குரல் வளத்தால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பிரவீன், இந்த வாரம் நடைபெற்ற சீனியர் ஜூனியர் ரவுண்ட்டில் சரிகமப சீசன் 3 விஜய் பாஸ்கர் உடன் இணைந்து காத்தடிக்குது காத்தடிக்குது என்ற பாடலை பாடி அசத்தி நடுவர்களையும் கூட சேர்ந்து ஆட்டம் போட வைத்தார். இதனைத் தொடர்ந்து தான் இந்த மேடையில் இருக்க காரணம் தன்னுடைய அப்பா தான் என்று பிரவீன் உருக்கமாக சொன்னார்.
இதையடுத்து அவரது அப்பாவின் குரல் பின்புறத்தில் ஒலிக்க பிரவீன் கலங்கி நின்றார். ஒரு பிரைமரி ஸ்கூலில் 15000 ரூபாய் சம்பளத்தில் வாத்தியாராக பணியாற்றும் பிரவீனின் அப்பா, தன்னுடைய குடும்பம் மட்டுமல்லாமல் தனது சகோதரனின் மறைவால் அவரது குடும்பத்தையும் குழந்தைகளையும் சேர்த்து கவனித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அதேபோல் மனைவியின் சகோதரனின் குடும்பமும் ஆதரவில்லாமல் நிற்க அவர்களையும் அரவணைத்து கவனித்து வருகிறார்.

பிரவீன் அப்பா ஒருவரின் உழைப்பில் 15 பேர் வாழ்க்கை இருப்பதாக உருக்கமாக பேசினார். முன்னதாக தன்னுடைய மகன் பல இசை நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள முயற்சி செய்த நிலையில், அவரின் குரல் சத்தமாக கிழிக்கும் வகையில் இருப்பதாக கூறி, நிறைய பேர் அவரை நிராகரித்ததாகவும் தொடர்ந்து உன்னால் முடியும் என அவனுக்கு தன்னம்பிக்கை மட்டுமே ஊட்டி இந்த இடத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போது தன்னுடைய மகன் தனக்கு பெருமை சேர்த்து விட்டான் என அவர் கண் கலங்கி பேசினார். சுயநலமில்லாமல் தன்னுடைய சகோதரனின் குடும்பம், மனைவியின் சகோதரன் குடும்பம் என அரவணைத்துச் செல்லும் பிரவீனின் தந்தையின் குணம் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பிரவீன் நடுவர்களையும் பொதுமக்களையும் தன்னுடைய பாட்டுத் திறமையால் கவர்ந்து வருகிறார்.