சென்னை: நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது மாவீரன்.
இந்தப் படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கியிருந்தார். படத்தில் மிஷ்கின் வில்லனாக மிரட்டியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
அமேசான் பிரைமில் வெளியாகும் மாவீரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகிபாபு, சரிதா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 14ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் திரையரங்குகளில் வெளியானது மாவீரன் படம். மண்டேலா என்ற சிறப்பான படத்தை கொடுத்த மடோன் அஷ்வின் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
படம் தற்போது வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி படக்குழுவினர் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டிருந்தனர். இதுவரை படம் 80 கோடிகளுக்கும் மேல் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்துள்ள நிலையில், விரைவில் 100 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்கள் அவரை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சிறப்பாக்கியது.
இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில், அடுத்ததாக வெளியான பிரின்ஸ் படம் சிவகார்த்திகேயனுக்கு சொதப்பலாகவே அமைந்தது. இந்நிலையில் தற்போது மாவீரன் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. தற்போது வரை 80 கோடிகளை வசூலித்துள்ள இந்தப் படம் விரைவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
படம் அமேசான் பிரைமில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல் டைம் ஆக்ஷன் என்டர்டெயினராக வெளியான மாவீரன் படத்தில் வித்தியாசமான சிவகார்த்திகேயனை பார்க்க முடிந்தது. பயந்தாங்கொள்ளியான அவருக்கு கிடைக்கும் சூப்பர் பவரால் அவருடைய வாழ்க்கை மட்டுமின்றி அவரை சார்ந்தவர்களின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதை இந்தப் படம் கதைக்களமாக கொண்டிருந்தது.
மாவீரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் அவர் ராணுவ வீரராக நடித்து வருகிறார். படத்தில் அவருக்கு சாய் பல்லவி ஜோடி சேர்ந்துள்ளார். வித்தியாசமான ஹேர்ஸ்டையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கெத்தாக நடித்து வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில், அவரது ஹேர்ஸ்டைலை வெளிப்படுத்தாமல் குல்லாவுடன் அவர் மாவீரன் படத்தின் பிரமோஷன்களில் பங்கேற்றார்.