மூணாறு:கேரளா மூணாறில் மாணவர்களுக்கு ‘டைபாய்டு’ காய்ச்சல்பரவியதால் அரசு உண்டு, உறைவிட பள்ளி மூடப்பட்டது.
மூணாறில் காலனி பகுதியில் உள்ள அரசு உண்டு, உறைவிட பள்ளியில் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 260 பேர் விடுதியில் தங்கி ஐந்து முதல் பிளஸ் 2 வரை படித்து வருகின்றனர்.
அவர்களில் 14 பேர் டைபாய்டு காய்ச்சலால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டனர்.
அதில் 6 மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய எட்டு மாணவர்கள் தங்கும் விடுதியில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து தேவிகுளம் சமூக சுகாதார மையத்தினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மேலும் ஆறு மாணவர்களுக்கு டைபாய்டு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.
பள்ளி மூடல்: மாணவர்களிடையே டைபாய்டு பரவியதால் பள்ளியை மூடுமாறு இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி பள்ளி மூடப்பட்டது. பள்ளியில் எஞ்சிய மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு டைபாய்டு பாதிப்பு உள்ளதா என கண்டறிவதற்கு ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அறிக்கையின் அடிப்படையில் பள்ளி திறக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement