One More Chivingi Tiger Killed: Forest Activists Shocked | மேலும் ஒரு சிவிங்கி புலி பலி : வன ஆர்வலர்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

போபால்:மத்திய பிரதேசம் தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிவிங்கி புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு பெண் சிவிங்கி புலி இறந்தது.

நம் நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருந்த சிவிங்கி புலிகள் பல ஆண்டுகளுக்கு முன் அழிந்த நிலையில், அவற்றை மீண்டும் வளர்க்கும் திட்டத்தை முன்னெடுத்த மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து சிவிங்கி புலிகளை இடமாற்றம் செய்தது.

தென்ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கி புலிகளும், தென் ஆப்ரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளும், மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

latest tamil news

இவை அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், பெண் சிவிங்கி புலி ஜுவாலா கடந்த மார்ச்சில் நான்கு குட்டிகளை ஈன்றது. இதையடுத்து, மொத்தம் 24 சிவிங்கி புலிகள் பராமரிக்கப்பட்டு வந்தன.இந்நிலையில், நோய் பாதிப்பு போன்ற காரணங்களால் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் எட்டு சிவிங்கி புலிகள் உயிரிழந்தன.

இதற்கிடையே, தாத்ரி என்ற பெண் சிவிங்கி புலி இன்று( 02 ம் தேதி) இறந்தது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து அறிய, பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வன விலங்கு

அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிவிங்கி புலிகள் அடுத்தடுத்து உயிரிழப்பது, வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.