நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, சேட்லைன் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி,31. இவர் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 12 பவுன் நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பூங்கொடி அளித்த புகாரின் பேரில், கோத்தகிரி போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த முத்துவேல்,41 என்பவர், நகையை திருடியது தெரியவந்தது. கோத்தகிரி போலீசார் நேற்று முத்துவேலை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement