கிரேட் வெஸ்டர்ன் மலைகளில் இறந்த பெண்ணின் சடலம் மீட்பு

தலவாக்கலை லிந்துலை பொலிஸ் நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க 112 வது காலாட் பிரிகேடின் 3 வது இலங்கை சிங்கப் படையினர் (2) அதிகாலை பிரபல கிரேட் வெஸ்டர்ன் மலைப்பகுதிக்கு சென்று மலையில் இருந்து விழுந்து பல மணிநேரம் அல்லது நாட்களுக்கு முன்பு இறந்த இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலத்தை மீட்டனர்.

சடலத்தை மீட்ட படையினர் அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்று லிந்துலை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளுடன் நுவரெலியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இதே சந்தர்ப்பத்தில் மீட்பு பணிக்குச் செல்லும் வழியில் குழுவில் இருந்த வீரர்களில் ஒருவருக்கு திடீரென இதயக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே அவர் இறந்து விட்டார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன், பொலீஸாரால் விசாரணையும் நடத்தப்பட்டு வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.