கொல்லம், அமெரிக்காவைச் சேர்ந்த, 44 வயது பெண் ஒருவர், கேரளாவுக்கு கடந்த 22ம் தேதி வந்திருந்தார்.
இவர், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் தங்கியிருந்தார்.
இவர், கடந்த 31ம் தேதி ஆசிரமம் அருகே உள்ள கடற்கரையில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த இருவர், அவருடன் சேர்ந்து மது அருந்தினர்.
இதன் பின், இருசக்கர வாகனத்தில் அவரை ஏற்றிக் கொண்டு, அருகே உள்ள காலியான வீட்டிற்கு அழைத்துச் சென்று, மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், நேற்று முன்தினம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், சம்பந்தப்பட்ட இருவரை நேற்று கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement