Vadivelu: அவரை போல் நடித்ததால் ஆள் வைத்து அடித்தார்: வடிவேலு குறித்து பகீர் கிளப்பிய பிரபல நடிகர்.!

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த படம் ‘காதல்’. வழக்கமான காதல் கதையாக இல்லாமல் தமிழ் சினிமாவை புரட்டி போடும் ஒரு படமாக வெளியாகி அனைவரையும் கலங்க வைத்தது ‘காதல்’ படம். இந்தப்படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் சுகுமார். இந்தப்படம் கொடுத்த வரவேற்பால் காதல் சுகுமார் என அழைக்கப்பட ஆரம்பித்தார்.

பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குனமான இவர் யூடிப் சேனல் ஒன்றுக்கு தன்னுடைய சினிமா பயணம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் வடிவேலுவால் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்தும் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அந்த வீடியோவில், வடிவேலுவின் தீவிர ரசிகரான எனக்கு அவரது உடல்மொழி அப்படியே வரும். இதனால் என்னை அவரை போலவே சிலர் நடிக்க சொன்னார்கள். ஒரு படத்தில் நடிகர் பொன்னம்பலத்துடன் இணைந்து நடிக்கும் போது, வடிவேலு மாதிரி நடித்தேன். அதன்பிறகு ஒருநாள் போண்டா மணியும், முத்துக்காளையும் வடிவேலு என்னை பார்க்க கூப்பிடுவதாக அழைத்தனர்.

நானும் நம்மோட குருநாதரே நம்மை பார்க்க அழைக்கிறாரே என ஆர்வத்துடன் அவரை பார்க்க சென்றேன். அங்கு தனியறையில் ஒன்றில் சந்தித்த போது வடிவேலு அண்ணன், ‘என்னை மாதிரியே நடிக்கிறியாமே. என் அம்மா கூட என் வயித்துல பிறக்காத பிள்ளை மாதிரியே இருக்கான்டான்னு சொன்னாங்க’ என வெகுவாக பாராட்டினார். இதனால் நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். அதன்பின்னர் போண்டா மணியும், முத்துக்காளையும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

Jailer Trailer: அடி தூள்.. தரமான சம்பவம்: நெல்சன் திலீப்குமாரை பாராட்டி தள்ளும் தலைவர் ரசிகர்கள்.!

நானும் போக கிளம்பிய போது, இருடா கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்ன்னு வடிவேலு சார் சொன்னாரு. அதன்பின்னர் என்னை மாதிரியே நடிப்பேன்னு ஒவ்வொரு ஆபிஸா போய் வாய்ப்பு கேட்கிறியாமேன்னு கேட்டார். நான் இல்லண்ணே. ஒரு படத்துல உங்களை மாதிரி நடிச்சேன். அவ்வளவு தான். இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன் சொன்னேன்.

அப்போது பின்னாடி நின்றிருந்த ஆட்கள் என்ன எதிர்த்து எதிரிச்சு பேசுறன்னு என்னை கீழே தள்ளிவிட்டு தாக்க ஆரம்பித்தனர். தாறுமாறாக அடி விழுந்தது. வீட்டுக்கு வந்த பிறகு மனைவி முகமெல்லாம் வீங்கி இருப்பதை பார்த்து என்னன்னு கேட்டாங்க. பைக்ல இருந்து கீழ விழுந்ததா பொய் சொன்னேன். நைட் எல்லாம் தூங்கவே இல்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் கூட எண்ணம் வந்தது. இதனால நடு ராத்திரில கதறி அழுதேன்.

Jailer: ‘பாட்ஷா’ பாணியில் மிரள விடும் தலைவர்: ‘ஜெயிலர்’ டிரெய்லரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா.!

அதுக்கப்புறம் தான் மனைவி விஷயம் தெரிஞ்சு, உன்னை பார்த்து பயப்படுறாங்கன்னா நீ அவுங்களை விட வளர போறன்னு எனக்கு நம்பிக்கை கொடுத்தார் என உருக்கமாக பேசியுள்ளார் காதல் சுகுமார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வடிவேலுவா இப்படி.? என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சுகுமார் அடுத்ததாக சந்தானம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.