ஆடிப்பெருக்கு நாளான ஆக.3-ம் தேதி பத்திரப்பதிவு மூலம் ரூ.100 கோடி வருவாய்: தமிழக அரசு

சென்னை: ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே உள்ள 100 முன்பதிவு டோக்கன்களுடன் 50 முன்பதிவு டோக்கன்கள் இணையத்தில் அதிகரிக்கப்பட்டு பொது மக்கள் பயன் பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் ஆக.3-ம் தேதியன்று ஈட்டப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொது மக்கள் பயன் பெறும் வகையில் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு 03.08.2023 அன்று பொது மக்களால் அதிக அளவில் ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் பொது மக்கள் பதிவு செய்ய விரும்பும் அனைத்து ஆவணங்களுக்கும் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக ஏற்கெனவே உள்ள 100 முன்பதிவு டோக்கன்களுடன் 50 முன் பதிவு டோக்கன்கள் சேர்க்கப்பட்டு 150 ஆக உயர்த்தப்பட்டது.

ஆவணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை இணையதளத்தில் சொத்து தொடர்பான விவரங்களை உள்ளீடு செய்து முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு ஒரு நாளைக்கு 100 முன் பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200 முன்பதிவு டோக்கன்களும் அதிக ஆவணப்பதிவு கொண்ட 100 அலுவலகங்களுக்கு ஒரு நாளைக்கு 100 சாதாரண முன்பதிவு டோக்கன்களும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் இணைய வழி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், 03.08.2023 அன்று ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே உள்ள 100 முன்பதிவு டோக்கன்களுடன் 50 முன் பதிவு டோக்கன்கள் இணையத்தில் அதிகரிக்கப்பட்டு பொது மக்கள் பயன் பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது.

இதனால் ஆவணம் பதிவு செய்ய விரும்பிய அனைத்து பொது மக்களுக்கும் முன்பதிவு டோக்கன்கள் எவ்வித தட்டுப்பாடுமின்றி கிடைப்பதற்கு ஆவண செய்யப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் 03.08.2023 அன்று ஈட்டப்பட்டுள்ளது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.