நாகசைதன்யாவுடன் நடிப்பு பயிற்சி மேற்கொண்ட பாலாவின் முன்னாள் மனைவி

இயக்குனர் சிவாவின் தம்பியும் வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான நடிகர் பாலா தற்போது மலையாள திரையுலகில் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு பாடகியான அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு அவந்திகா என்கிற பெண் குழந்தையும் உண்டு. கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2016-ல் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

நடிகர் பாலா டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதேசமயம் அம்ருதா சுரேஷ் பிரபல இசையமைப்பாளரான கோபி சுந்தருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி இணைந்து வெளியிடும் ரொமாண்டிக் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ரொம்பவே பிரபலம்.

இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் இருக்கும் ஆதிசக்தி தியேட்டர் ஆர்ட்ஸ் நடத்தி வரும் நடிப்புக்கான ஒர்க்ஷாப் ஒன்றில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார் அம்ருதா சுரேஷ். இந்த ஒர்க்ஷாப்பில் நடிகர் நாகசைதன்யாவும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்..

இதுபற்றி அம்ருதா சுரேஷ் கூறும்போது, “நாக சைதன்யா போன்ற அற்புதமான மனிதர்களுடன் இந்த ஒர்க் ஷாப்பில் கலந்து கொண்டதற்கு பெருமைப்படுகிறேன். இந்த அனுபவத்தின் மூலம் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அவருடைய படங்கள் தொடர்ந்து வெற்றி பெறவும் மகிழ்ச்சியாக இருக்கவும் எனது இதயம் கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.