ருத்ரபிரயாக்: உத்தராகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், ருத்ரபிரயாக் பகுதியில் நேற்று கனமழையால் கவுரிகுந்த் என்ற பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தாழ்வான பகுதிகளில் 3 கடைகள் பலத்த சேதம் அடைந்தன. அந்தக் கடைகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், 12-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, போலீஸ், தீயணைப்புத் துறை உட்பட பல துறை வீரர்கள் சம்பவ பகுதியில் உள்ளனர் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.