அம்ரித் பாரத் திட்டம்… வேற லெவலுக்கு மாறும் 508 ரயில் நிலையங்கள்… பிரதமர் மோடி கொடுத்த சிக்னல்!

அம்ரித் பாரத் ஸ்டேஷன்… இதுதான் திட்டத்தின் பெயர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் 1,000 சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள் புதுப்பொலிவு

இந்த திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். எஸ்கலேட்டர் வசதி கொண்டு வரப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்து தரப்படும். நடைமேடைகள் மேம்படுத்தப்படும். 5ஜி இணையச் சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். காத்திருக்கும் அறைகள் அமைக்கப்படும்.

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம்

கூடுதல் நடைமேடைகள் கொண்டு வரப்படும். வாகனங்கள் நிறுத்தும் வசதி, சிசிடிவி கேமராக்கள், நுழைவு வாயில்களை புதுப்பொலிவு பெறச் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் 508 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகளை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 6) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

நிதி ஒதுக்கீடு

முதல்கட்டமாக 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட 508 ரயில் நிலையங்களில் தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் அடங்கும். அவை,

தமிழக ரயில் நிலையங்கள்

ஜோலார்பேட்டைசெங்கல்பட்டுகூடுவாஞ்சேரிபெரம்பூர்திருவள்ளூர்திருத்தணிகும்மிடிபூண்டிஅரக்கோணம்விழுப்புரம்சேலம்திருப்பூர்கரூர்போத்தனூர்நாகர்கோவில்தென்காசிவிருதுநகர்மயிலாடுதுறைதஞ்சாவூர்

பிற மாநில ரயில் நிலையங்கள்

இதுதவிர உத்தரப் பிரதேச மாநிலத்தில் 55 ரயில் நிலையங்களும், பிகார் மாநிலத்தில் 49 ரயில் நிலையங்களும், மகாராஷ்டிராவில் 44, மேற்குவங்க மாநிலத்தில் 37, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 34, அசாம் மாநிலத்தில் 32, ஒடிசா மாநிலத்தில் 25,

உள்ளூர் பாரம்பரியம், வரலாறு

ஆந்திரா மாநிலத்தில் 18, ஹரியானா மாநிலத்தில் 15, கர்நாடகா மாநிலத்தில் 13 ரயில் நிலையங்கள் அடங்கும். ஒவ்வொரு ரயில் நிலையமும் அந்தந்த பகுதியின் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.